.

...

 


Print Friendly, PDF & Email

 

Monday, March 1, 2021

நபிகள்(ஸல்) அவர்களின் இஸ்ரா மிஃராஜ் விண்ணேற்றம்

நபிகள்(ஸல்) அவர்களின் இஸ்ரா மிஃராஜ் விண்ணேற்றம்.

இது கனவில் நடந்ததாக இருந்தால் குறைஷிகள் மறுத்திருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் கனவு எல்லோரும் காணக் கூடியதே.

வெறும் கனவாய் இருந்தால் இதில் ஒன்றும் அதிசயம் இல்லை.
தங்கள் பூத உடலோடு சென்றதால்தான் இது அதிசயமானது.
எந்த நபிமார்களுக்கும் கிடைக்காத ஒரு அற்புதமாக இருக்கிறது.

அபூஜஹ்ல் கிண்டல் செய்திருக்க மாட்டான். குறைஷிகள் நம்ப மறுத்ததோடு கிண்டல் செய்தனர். 
( நூல் : புகாரி : 3886 )

முஸ்லிம்களில் உள்ள முனாஃபிக்குகளை கண்டு பிடிக்க இது வாய்ப்பாக அமைந்தது.

நபியே நாம் (இஸ்ரா மிஃராஜின் போது) உமக்கு காட்டிய காட்சிகளை மக்களுக்கு (அவர்களின் ஈமானை அறிய ) ஒரு பரிட்சையாகவே அமைத்தோம்.
( அல் குர்ஆன் 17:60 )

அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். 
அவன் முஹம்மது (ஸல்) என்னும் தன் அடியாரை 
(காஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (வெகு தூரத்திலுருக்கும் பைத்துல் முக‌த்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு 
ஒரே இரவில் அழைத்துச் சென்றான். 
அவ்வாறு அழைத்துச் சென்ற நாம் அதனைச் சுற்றி உள்ளவைகளை அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம்.
நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம். 
நிச்சயமாக உங்கள் இறைவன் செவியுறுபவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.
( அல் குர்ஆன் 17:1 )

நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் உடலுடன் சென்ற பயணம்.

ரஜப் 27 சனி  621 AC இரவில் நபிப் பட்டத்திற்கு பின் ஹிஜ்ரத்துக்கு முன் நிகழ்ந்தது.

முதல் பகுதி இஸ்ரா மக்கா அல் ஹரம் முதல் பாலஸ்தீன் அல் அக்ஸா வரை
இரண்டாம் பகுதி மிஃராஜ் அல் அக்ஸா முதல் வானுலகம் வரை

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி வந்தார்கள்
( ஸஹீஹ் முஸ்லிம் 263 )

ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது உண்மையான தோற்றத்தில்) பார்த்தார்கள். 
( நூல்:புகாரி : 4856 ) 

ஜிப்ரயீல்(காப்ரியல்)(அலை) அல்லாஹ்வின் ஸலாமை எத்திவைத்து அழைப்பு கொடுக்கிறார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் இருதயம் பிளக்கப்பட்டு ஜம் ஜம் நீரால்கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் , நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்… அல்லது ஹிஜ்ரில்… படுத்துக் கொண்டிருந்தேன். 
அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.
நெஞ்சின் காறை யெலும்பிலிருந்து அடிவயிறு வரை… அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை… 
பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார்.
பிறகு அதை “ஸம்ஸம்” நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து 
என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே) நெஞ்சை மூடிவிட்டார்.
( ஸஹீஹ் முஸ்லிம் 263 ) ( ஸஹீஹ் புகாரி 3887 )

ஜிப்ரீல்(அலை) அவர்கள் புராக், கழுதைக்கும் குதிரைக்கும் இடைப்பட்ட ஒளியாலான வாகனத்தை கொண்டு வந்தார்கள்.

அந்த வாகனம் தனது பார்வை எட்டுகிற தூரத்திற்கு தனது கால் குளம்பை எடுத்து வைத்தது. 
( நூல்:முஸ்லிம் : 25 )

மதினாவில் இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
நாயகம் (ஸல்) அவர்களை அடக்கம் செய்துள்ள தற்போதய இடம்.

தூர்ஸினா மலையில் இரண்டு ரக்அத் தொழுதார்கள்
மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் பேசிய இடம்

பைத்துல் லஹ்மே (பெத்தல ஹேம்) வில் இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
ஈஸா (அலை) அவர்கள் பிறந்த‌ இடம்.

வழியில் அவர்கள் கண்ட காட்சிகள்

தொழுகையை விட்டவன் தலையை உடைப்பதைப் பார்த்தார்கள்

தருமம் செய்யாத கஞ்சன் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

ஹராமான காரியங்களைச் செய்தவர்கள் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

தான் அமல் செய்யாமல் பிறருக்கு உபதேசம் மட்டும் செய்பவர்கள் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

கண‌வனின் உரிமையை மீறிய பெண் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

புறம் பேசியவர்கள் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

பைத்துல் மக்திஸிற்கு அருகில் உள்ள செம்மணற் குன்றிற்கருகில் மூஸா (அலை) அவர்கள் தொழுது கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். 
( நூல் : நஸயீ 1614 )

நபி(ஸல்) அவர்களிடம் பால் கிண்ணம், தேன் கிண்ணம், மது கிண்ணம் ஆகி யவை கொண்டு வரப்பட்டது. அதில் பால் கிண்ணத்தை நபி(ஸல்) அவர்கள் தேர்வு செய்து பிறகு அதிலுள்ள பாலை பருகினார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் இயற்கை மரபில் உங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நீங்கள் மது கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறி போயிருக்கும் என்று கூறினார்கள். 
( நூல்: புகாரி : 5576, 5610 )

புராக்கை தூணில் கட்டினார்கள். 
( நூல் : முஸ்லிம் : 259 )

அனைத்து நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழ வைத்தார்கள்.

பிறகு அங்கிருந்து  மிஃராஜிர்கு புறப்பட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஏழு வானங்களை கடந்து சென்றார்கள். 
( நூல்:புகாரி : 3207 )

நபிகளாரின் சந்திப்பு

1 ஆம் வானத்தில் ஆதம்(அலை)

2 ஆம் வானத்தில் யஹ்யா(அலை), ஈஸா(அலை)(ஜீஸஸ்)

ஈஸா (அலை) அவர்களையும் அல்லாஹ் பூத உடலோடுதான் இரண்டாம் வானத்தில் உயர்த்தி இருக்கிறான்.

3 ஆம் வானத்தில் யாகூப்(அலை)(ஜேக்கப்) யூசுஃப்(அலை) சுலைமான்(அலை)(சாலமன்) தாவூது(அலை)(டேவிட்)

4 ஆம் வானத்தில் இத்ரீஸ்(அலை)

5 ஆம் வானத்தில் ஹாரூன்(அலை)

6 ஆம் வானத்தில் மூஸா(அலை)

7 ஆம் வானத்தில் பைத்துல் மாமுர் பள்ளியில் இப்ராஹிம்(அலை)
( நூல்:முஸ்லிம்:259 )

நபிமார்களை சந்தித்து உரையாடினார்கள்
( நூல்:புகாரி : 3207 )

நரகத்தின் தலைவர் வானவர் மாலிக் அவர்களை சந்தித்தார்கள்.
( நூல் : முஸ்லிம் : 267 )

நரக வேதனைகள் காட்டப்பட்டன.

நரகத்தையும் எட்டிப் பார்த்தார்கள் அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையேப் பார்த்தார்கள்.
( நூல் : முஸ்லிம் : 267 )

மனிதர்களை துன்புறுத்தியவர்கள்,
பிறர் பொருளை அபகரித்தவர்கள்,
அனாதைகளை ஏமாற்றியவர்கள்,
வட்டி வாங்கியவர்கள்,
தவறான நீதி வழங்கியவர்கள்,
தடை செய்த பொருள்களை சாப்பிட்டவர்கள்,
சுத்தத்தை பேணாதவர்கள்,
மகா பொய்யனும் குழப்பவாதியுமான தஜ்ஜாலையும் பார்த்தார்கள். 
( நூல் : முஸ்லிம் : 267 )

இவர்களுக்கு அளிக்கப்படும் வேதனைகளைப் பார்த்தார்கள்

சுவர்க்கத்தின் வானவர் தலைவர் ரிழ்வான் அவர்களை சந்தித்தார்கள்

சுவனத்தை எட்டிப் பார்த்தார்கள். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே பார்த்தார்கள். 

முத்துக்களால் உள்ள கயிறுகளையும் பார்த்தார்கள். சுவனத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது.

சுவ‌ர்க்கச் சோலைகள், ஹூருல் ஈன்கள் (சொர்க்க கன்னிகள்), ஹவ்லுல் கவ்தர் (நீர்த் தடாகம்) காட்டப்பட்டன.
( நூல் : புகாரி : 6581 )

ஜிப்ரயீல் அவர்களின் எல்லை முடிவுற்றது. இனி தன்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. மீறினால் எரிந்து சாம்பலாகி விடுவேன். என்றார்கள்

மேலும், நாம் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்.
(அல்குர்ஆன் : 19:57) 

சித்ரத்துல் முந்தஹா (இலந்தை மரம்) வை அடைந்தார்கள்.

சித்ரத் என்றால் இலந்தை மரம். முன்தஹா என்றால் முடிவு, எல்லை என்பதாகும்.

சித்ரதுல் முன்தஹா என்பது ஆறாம் வானத்தில் தொடங்கி ஏழாம் வானம் வரை நீண்டிருக்கும் பிரமாண்ட மரமாகும்.
( புகாரி-349: )

அங்கிருந்த இலந்தை மரத்தின் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றிருந்தது 
அதன் பழங்களை கூஜாக்களை போன்று (பெரிதாக) இருந்தது. பிறகு
( அல் குர்ஆன் 53:14 ) ( நூல்:முஸ்லிம்:259 )

(அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. 
இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. ‘ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?’ என்று கேட்டேன். 
அவர், ‘உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும். 
வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.
( ஸஹீஹ் புகாரி 3887 )

காபகவுஸைனி அவ் அத்னா(சமீப சமூக ஸ்தானம்)தலம் அடைந்தார்கள்
( அல் குர்ஆன் 53:9 )

சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான 
(இறை)வன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான். 
( ஸஹீஹ் புகாரி 7517 )

முஹம்மதே உம்மை விட்டும் உமது திரையை நீக்கினோம். இன்று உமது பார்வையானது கூர்மையுடையதாகும்.
( அல் குர்ஆன் 50:22 )

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.
( அல் குர்ஆன் 6:103 )

“அல்லாஹ் (நேருக்கு நேர்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒருவருக்குமில்லை எனினும் வஹீயின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது வானவர்களை அனுப்பி வைத்து வஹீயின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை(மனிதனுக்கு) அறிவிக்கிறான். நிச்சயமாக அவன் மிக மேலானவன், மிக ஞானமுடையவன். 
( அல் குர்ஆன் 42:51 )

அல்லாஹ்வின் நூரை-ஒளியை புறக் கண்களால் தரிசித்தார்கள்.

அல்லாஹ் வானங்கள் பூமியின் ஒளியாய் இருக்கிறான்.
அது ஒளிக்கு மேல் ஒளியாகும்
( அல் குர்ஆன் 24:35 )

ஸுஜூது செய்தார்கள்

நபிகள்(ஸல்) அவர்கள்:கூறினார்கள்
வண‌க்கங்களும், வாழ்த்துகளும் அல்லாஹ்வுக்கே உரியன.
அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யி பாத்து

அல்லாஹ்:கூறினான்
நபியே உங்கள் மீது அல்லாஹ்வின் ஸலாமும், அருளும், பரக்கத்தும் உண்டாவதாக.
அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்து லில்லாஹி வபரகாத்துஹு

நபிகள்(ஸல்)  அவர்கள்:கூறினார்கள்
உனது ஸலாம் என் மீதும், வணங்கும் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக.
அஸ்ஸலாமு அலைய்னா வ அலா இபாதிலாஹிஸ் ஸாலிஹிய்ன்.

ஜிப்ரயீல்(அலை)  அவர்கள்:கூறினார்கள்
வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
நாயகம்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன்.
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரசூலுஹு

அல்லாஹ் மூன்று அன்பளிப்புகளைக் கொடுத்தான்.

1. (50 நேரத் தொழுகைகள் பிறகு) ஐந்து நேரத் தொழுகைகள்,
2. அல்பகரா அத்தியாயத்தின் கடைசி 2 வசனங்கள்.  ( அல் குர்ஆன் 2:285, 286 )
3. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் இறந்தவருக்கு பெரும் பாவங்கள் மன்னிக்கப்படும்.
( நூல்:நஸாயீ:447 )

வழங்கப்பட்ட 50 நேரத் தொழுகைளை 5 ஆக குறைத்த விதம்.

1 ஆம் முறை 50 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

2 ஆம் முறை 40 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

3 ஆம் முறை 35 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

4 ஆம் முறை 30 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

5 ஆம் முறை 25 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

6 ஆம் முறை 20 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

7 ஆம் முறை 15 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

8 ஆம் முறை 10 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

9 ஆம் முறை 5 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.

தன் நேசரை பிரிய மனமில்லாமல் அல்லாஹ் திரும்ப திரும்ப அழைத்து பேசி மகிழ்ந்தான்.

திரும்ப‌வும் குறைப்பதற்கு வெட்கப்பட்டு பெற்ற‌ அன்பளிப்போடு பைத்துல் முஅஹத்தஸ் திரும்பினார்கள்.
(ஸஹீஹ் புகாரி 3887)

மீண்டும் புராக்கில் பைத்துல் ஹரம் திரும்பினார்கள்.

நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். 
அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். 
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீரை அருந்திவிட்டு 
மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), 
காலையில் மக்களுக்கு இப்பிரயாணக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை 
என்பதற்குரிய மிகப்பெரியஆதாரமாக அமைந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

முதலில் சிறிய தகப்பனார் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள்.

சிறிய தந்தையார் ( அபூ தாலிப் ) மகள் உம்முஹானி(ர‌லி) அவர்களின் வீட்டில் பிரவேசித்து அவர்களிடமும் சொன்னார்கள்.

காஃபாவில் அபூஜஹ்லிடம் நடந்ததைச் சொன்னார்கள்.

அபூஜஹ்ல் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் சொன்னான். எந்த மறுப்புமின்றி உடனே ஏற்றதால் சித்தீக்(உண்மையாளர்) ஆனார்கள்.

 


Thanks to: 

jumuaamedai.wordpress.com, sufimanzil.org

17-07-1442 AH  ரஜப்                       abdulmalick2(at)gmail.com                     01-03-2021  CE

 

No comments:

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

... உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam Your browser should support iFrame to view this PDF document abdulm...