.

...

 


Print Friendly, PDF & Email

 

Saturday, March 13, 2021

12-03-2021, இன்று ப‌யானில் கேட்ட முக்கிய கருத்துகள்.

 

12-03-2021, இன்று ப‌யானில் கேட்ட முக்கிய கருத்துகள்

12-03-2021, இன்று ப‌யானில் கேட்ட முக்கிய கருத்துகள்.

மிஃராஜின் போது அல்லாஹ் நபி(ஸல்) அவர்களிடம் 
5 நேரத் தொழுகைகளை நிறைவேற்றினால் 50 நேரத்தொழுகைக்கான நன்மைகள் தருவேன் என்று கூறினான்.

நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு மிஃராஜிர்காகவும் நோன்பு வைக்கவுமில்லை. சிறப்புத் தொழுகை தொழவுமில்லை.

உமர்(ரலி) அவர்களின் நாக்கில் அல்லாஹ் பேசுகிறான். (ஹதீஸ்)

உமர்(ரலி) அவர்கள் 
மிஃராஜ் அன்று மிஃராஜிர்காக நோன்பு வைக்கிறேன் என்ற நிய்யத்தோடு நோன்பு நோற்பதை தடை செய்தார்கள்.

மிஃராஜ் தினத்தன்று நோன்பு வைத்த ஒரு நபரின் நோன்பை முறிக்கச் செய்தார்கள்.
ரஸுல்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை செய்வதை விட்டும் தடுத்தார்கள்.

அலி(ரலி) அவர்களைப் பற்றி ஒரு ஹதீஸ்.
நான் அறிவின் பட்டணம் என்றால் அலி அதன் நுழைவு வாயில்.
ஆக அறிவில், ஞானத்தில் சிறந்தவர் அவர்.
அவரே தொழுகையின் போது தொப்புழின் மீது கைகட்டி நிற்பார்கள்.

அலி(ரலி) அவர்கள் கூறியது.
நான் அல்லாஹ்விடம் பேச விரும்பினால் குர்ஆன் ஓதுவேன்.
அல்லாஹ் என்னிடம் பேசுவதை கேட்க விரும்பினால் தொழுகுவேன். என்றார்கள்.

தொழுகை முஃமினுக்கு மிஃராஜாகும்.

இஹ்ஸான்.
ஜிப்ரயீல்(அலை) அவர்கள் கூறியதாவது.
இஹ்ஸான் என்பது தொழுகையில் அல்லாஹ்வைப் பார்த்து வணங்குவதாகும்.
அப்படி முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்று மனதில் உறுதியாக நினைத்து தொழுவதாகும்.

குர்ஆன்
தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

அந்த அந்த நேரத்தில் தொழுவதுதான் சிறப்பாகும்.

தொழுகையை தவற விட்டு விட்டு அந்த நேரத்தில் வியாபாரத்தில் இருந்தால் பணம் அதிகமாக கிடைத்தாலும் அதில் பரக்கத் இருக்காது.

தொழுகையின் போது காலை விரித்து நிற்கக் கூடாது.

தக்பீர் சொல்லும் போது இரு உள்ளங்கைகள் கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

தொழுகையில் அடிக்கடி தக்பீர் சொல்லக் கூடாது.

காலின் பெரு விரல் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்க வேண்டும்.

ஸ‌ஃப்ஃபை சரி செய்ய குதிகால்களைப் பார்க்க வேண்டும்.

நிலையின் போது ஸஜ்தாவுடைய இடத்தில் பார்வை இருக்க வேண்டும்.

ருக்உ வில் முதுகை தட்டையாக வைக்க வேண்டும்.

ருக்உ வில் காலின் பெருவிரல் மீது பார்வை இருக்க வேண்டும்.

காஃபிர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வேறுபாடாய் இருப்பது தொழுகைதான்.

நம்மைப் போல் காஃபிர்களும் தொப்பி அணிகிறார்கள்.

நம்மைப் போல் காஃபிர்களும் தாடி வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொழுவதில்லை.

சூரா அல் முத்ததிர் அத்தியாயத்தில் 74:42 முதல் 74:47 வரை உள்ள வசனத்தில் தொழுகையை விட்டவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

சுவர்க்க வாசிகள் ஸகர் என்னும் நரகத்தில் உள்ளவர்களிடம் விசாரிப்பார்கள்.

உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?(என்று கேட்பார்கள்.)

அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

"அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. 

(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்

"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).

 

Thanks to: Imaam kulam hussain mosque

27-07-1442 AH  ரஜப்                       abdulmalick2(at)gmail.com                     12-03-2021  CE

 

No comments:

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

... உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam Your browser should support iFrame to view this PDF document abdulm...