.

...

 


Print Friendly, PDF & Email

 

Sunday, March 21, 2021

பராஅத், பராத், ஷஃபே பராத், ஷஃபே பராஅத், பாக்கியம் நிறைந்த இரவு


Print Friendly, PDF & Email

 

பராஅத், பராத், ஷஃபே பராத், ஷஃபே பராஅத், பாக்கியம் நிறைந்த இரவு.

 

பராஅத், பராத், ஷஃபே பராத், ஷஃபே பராஅத், பாக்கியம் நிறைந்த இரவு.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 

حمِ
ஹா, மீம்.  (44:1)
ஹா, மீம்.  (44:1)

وَالْكِتَابِ الْمُبِينِِ
வல் கிதாபில் முபிய்ன்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!  (44:2)

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَِ
இன்னா அன் ஜல்னாஹு ஃபிய் லைலத்தின் முபாரக்கத்தின் இன்னா குன்னா முந்திரிய்ன்
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.  (44:3)

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍِ
ஃபிய்ஹா யுஃப்ரஹு குல்லு அம்ரின் ஹக்கிய்ம்
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.  (44:4)
(குர்ஆன் 44:1, 2, 3, 4.)

இந்த ஆயத்தின் விளக்கத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் சரியான விளக்கத்தை அல்லாஹுவே அறிவான்.

இந்த ஆயத்தில் பராஅத் இரவைப் பற்றியே அல்லாஹ் சொல்வதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்


لِكُلِّ أَجَلٍ كِتَابٌِ
يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ ۖ 

லி குல்லி அஜலின் கிதாப்
யம்ஹு ல்லாஹு மா யஷாஉ வ யுஸ்பித்
“ஒவ்வொன்றுக்கும் தவணை (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது எனினும் அல்லாஹ் அவன் நாடியதை (அதில்) அழித்து விடுவான். 
(அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது” 
(அல் குர்ஆன். 13:38,39).


هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ ثُمَّ قَضَىٰ أَجَلًا ۖ
ஹுவல்லதிய் க்ஹலக்ககும் மின் திய்னிய்ன் ஸும்ம களயா அஜளன்
“அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) தவணையை 
(வாழ்நாளைக்குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” 
(அல் குர்ஆன். 6:2)


أَرَأَيْتَ الَّذِي يَنْهَىِٰ
عَبْدًا إِذَا صَلَّىِٰ

அர அய்தல்லதிய் யன்ஹா
அபதன் இஜா ஸல்லா
“(நபியே!) ஒர் அடியார் தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?” 
(அல் குர்ஆன்: 96:9,10)

فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ
ஃபஸ்தபிகுல் க்ஹய்ராத்
“நன்மைகளை செய்வதில் இறை அருளைப் பெறுவதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 2:148. 

وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا
வ ஸாரிஉ இலயா மக்ஃபிரத்தின் மின் ரப்பிக்கும் வ ஜன்னத்தின் அர்ளுஹா
“உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சுவர்கத்துக்கும் விரைந்துசெல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 3:133 


مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ۖ 
மன் ஜாஅ பில் ஹசனத்தி ஃபலஹு அஷ்ரு அம்ஸலிஹா
“எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. (அல் குர்ஆன் 6:160).

மேற்கூறப்பட்ட ஆயத்துகள் அனைத்தும் இந்த இரவுக்கும் அதன் செயல்களுக்கும் தொடர்புடயவை.

ஒன்றும் செய்யாமல் நேரத்தை வீணாக்குவதை விட அமல்களில் கவனம் செலுத்துவது சிறந்த செயலாகும்.

பராஅத் இரவில் பாக்கியமிழக்கும் பாவிகள்:
“ஷஃபான் 15-வது இரவு அல்லாஹ் தனது படைப்புகளுக்கு பிரசன்னமாகி அவனது அனைத்து அடியார்களையும் மன்னிக்கிறான்” 
என்று அறிவித்த அண்ணலார் (ﷺ) அவர்கள் இதில் விதி விலக்கானவர்களையும் பட்டியலிடுகிறார்கள் அவர்கள் வருமாறு:-
1, இறை மறுப்பாளர்கள்
2, இறைவனுக்கு இணை வைப்பவர்கள்
3, விரோதம் கொண்டிருப்பவர்கள்
4, தற்கொலை செய்தவர்கள்
5, உறவுகளைத் துண்டித்தவர்கள்
6, தாய் தந்தையருக்கு மாறு செய்து நோவினை செய்தவர்கள்
7, குடிகாரர்கள்
8, கரண்டைக்குகீழே உடை உடுத்தி இருப்பவர்கள்
9, சதிகாரர்கள்
10, சூனியம் செய்பவர்கள்

பராஅத் இரவு பரக்கத் பொருந்திய இரவு.

பராஅத் இரவில்தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும்

பராஅத் இரவில்தான் அவர் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்படும்.

பராஅத் இரவில்தான் அவர் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும்.

பராஅத் அன்று நோன்பு வைப்பது நஃபிலான அமல்.

நிஸ்ஃபு ஷஃபான் என்றால், ஷஃபானின் பாதி அதாவது 15 வது இரவு, பராஅத் இரவு, என்றால் விடுதலை இரவு

இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, 
லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, 

கடமையில்லாத விரும்ப‌த்தக்க நல்ல செயல்கள்
மக்ரிபுத் தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஸுறா ஓதி துஆ செய்வது.
இஷா தொழுகைக்குப் பிறகு கப்ரு ஜியாரத் செய்வது.
பஜ்ரு வரை அல்லது முடிந்த வரை நின்று, இருந்து இறை வணக்கம் புரிவது.
அன்று பகலில் நோன்பு வைப்பது.

ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) மறுக்கப்படும்

ஆடுகளின் ரோமங்களின் அளவு மக்கள் அல்லாஹ்வால் நரக விடுதலை அளிக்கப்படுவார்கள்

“குர்’ஆன் ஓதி அதைக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்”. நபி மொழி பதிவு திர்மிதி 2917. மிஷ்காத் 2210.

“எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நபி மொழி. தாரமி: 3418. மிஷ்காத்: 2171).

“குர்ஆன் ஒதும் மஜ்லிஸில் மலக்குகள் இறங்குவர்” புகாரி

“யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” 
இப்னு அப்பாஸ் (ரலி) 

பராஅத் துவா:  நீ எங்களைப் பாக்கியவான்களாக ஆக்கி அதை அப்படியே உறுதிப்படுத்துவாயாக.

கழா கத்ரு மாறுமா? மாறாது. ஆனால் சில நன்மையான‌ விஷயங்கள் அதை மாற்றும்.

 
 

Thanks to: Internet Friends

07-08-1442 AH  ஷாபான்                       abdulmalick2(at)gmail.com                     21-03-2021  CE

 

Saturday, March 13, 2021

12-03-2021, இன்று ப‌யானில் கேட்ட முக்கிய கருத்துகள்.

 

12-03-2021, இன்று ப‌யானில் கேட்ட முக்கிய கருத்துகள்

12-03-2021, இன்று ப‌யானில் கேட்ட முக்கிய கருத்துகள்.

மிஃராஜின் போது அல்லாஹ் நபி(ஸல்) அவர்களிடம் 
5 நேரத் தொழுகைகளை நிறைவேற்றினால் 50 நேரத்தொழுகைக்கான நன்மைகள் தருவேன் என்று கூறினான்.

நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு மிஃராஜிர்காகவும் நோன்பு வைக்கவுமில்லை. சிறப்புத் தொழுகை தொழவுமில்லை.

உமர்(ரலி) அவர்களின் நாக்கில் அல்லாஹ் பேசுகிறான். (ஹதீஸ்)

உமர்(ரலி) அவர்கள் 
மிஃராஜ் அன்று மிஃராஜிர்காக நோன்பு வைக்கிறேன் என்ற நிய்யத்தோடு நோன்பு நோற்பதை தடை செய்தார்கள்.

மிஃராஜ் தினத்தன்று நோன்பு வைத்த ஒரு நபரின் நோன்பை முறிக்கச் செய்தார்கள்.
ரஸுல்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை செய்வதை விட்டும் தடுத்தார்கள்.

அலி(ரலி) அவர்களைப் பற்றி ஒரு ஹதீஸ்.
நான் அறிவின் பட்டணம் என்றால் அலி அதன் நுழைவு வாயில்.
ஆக அறிவில், ஞானத்தில் சிறந்தவர் அவர்.
அவரே தொழுகையின் போது தொப்புழின் மீது கைகட்டி நிற்பார்கள்.

அலி(ரலி) அவர்கள் கூறியது.
நான் அல்லாஹ்விடம் பேச விரும்பினால் குர்ஆன் ஓதுவேன்.
அல்லாஹ் என்னிடம் பேசுவதை கேட்க விரும்பினால் தொழுகுவேன். என்றார்கள்.

தொழுகை முஃமினுக்கு மிஃராஜாகும்.

இஹ்ஸான்.
ஜிப்ரயீல்(அலை) அவர்கள் கூறியதாவது.
இஹ்ஸான் என்பது தொழுகையில் அல்லாஹ்வைப் பார்த்து வணங்குவதாகும்.
அப்படி முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்று மனதில் உறுதியாக நினைத்து தொழுவதாகும்.

குர்ஆன்
தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

அந்த அந்த நேரத்தில் தொழுவதுதான் சிறப்பாகும்.

தொழுகையை தவற விட்டு விட்டு அந்த நேரத்தில் வியாபாரத்தில் இருந்தால் பணம் அதிகமாக கிடைத்தாலும் அதில் பரக்கத் இருக்காது.

தொழுகையின் போது காலை விரித்து நிற்கக் கூடாது.

தக்பீர் சொல்லும் போது இரு உள்ளங்கைகள் கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

தொழுகையில் அடிக்கடி தக்பீர் சொல்லக் கூடாது.

காலின் பெரு விரல் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்க வேண்டும்.

ஸ‌ஃப்ஃபை சரி செய்ய குதிகால்களைப் பார்க்க வேண்டும்.

நிலையின் போது ஸஜ்தாவுடைய இடத்தில் பார்வை இருக்க வேண்டும்.

ருக்உ வில் முதுகை தட்டையாக வைக்க வேண்டும்.

ருக்உ வில் காலின் பெருவிரல் மீது பார்வை இருக்க வேண்டும்.

காஃபிர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வேறுபாடாய் இருப்பது தொழுகைதான்.

நம்மைப் போல் காஃபிர்களும் தொப்பி அணிகிறார்கள்.

நம்மைப் போல் காஃபிர்களும் தாடி வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொழுவதில்லை.

சூரா அல் முத்ததிர் அத்தியாயத்தில் 74:42 முதல் 74:47 வரை உள்ள வசனத்தில் தொழுகையை விட்டவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

சுவர்க்க வாசிகள் ஸகர் என்னும் நரகத்தில் உள்ளவர்களிடம் விசாரிப்பார்கள்.

உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?(என்று கேட்பார்கள்.)

அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

"அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. 

(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்

"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).

 

Thanks to: Imaam kulam hussain mosque

27-07-1442 AH  ரஜப்                       abdulmalick2(at)gmail.com                     12-03-2021  CE

 

Sunday, March 7, 2021

99 names of allah asma pdf

...

99 names of allah asma

abdulmalick2(at)gmail.com

...

Monday, March 1, 2021

நபிகள்(ஸல்) அவர்களின் இஸ்ரா மிஃராஜ் விண்ணேற்றம்

நபிகள்(ஸல்) அவர்களின் இஸ்ரா மிஃராஜ் விண்ணேற்றம்.

இது கனவில் நடந்ததாக இருந்தால் குறைஷிகள் மறுத்திருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் கனவு எல்லோரும் காணக் கூடியதே.

வெறும் கனவாய் இருந்தால் இதில் ஒன்றும் அதிசயம் இல்லை.
தங்கள் பூத உடலோடு சென்றதால்தான் இது அதிசயமானது.
எந்த நபிமார்களுக்கும் கிடைக்காத ஒரு அற்புதமாக இருக்கிறது.

அபூஜஹ்ல் கிண்டல் செய்திருக்க மாட்டான். குறைஷிகள் நம்ப மறுத்ததோடு கிண்டல் செய்தனர். 
( நூல் : புகாரி : 3886 )

முஸ்லிம்களில் உள்ள முனாஃபிக்குகளை கண்டு பிடிக்க இது வாய்ப்பாக அமைந்தது.

நபியே நாம் (இஸ்ரா மிஃராஜின் போது) உமக்கு காட்டிய காட்சிகளை மக்களுக்கு (அவர்களின் ஈமானை அறிய ) ஒரு பரிட்சையாகவே அமைத்தோம்.
( அல் குர்ஆன் 17:60 )

அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். 
அவன் முஹம்மது (ஸல்) என்னும் தன் அடியாரை 
(காஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (வெகு தூரத்திலுருக்கும் பைத்துல் முக‌த்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு 
ஒரே இரவில் அழைத்துச் சென்றான். 
அவ்வாறு அழைத்துச் சென்ற நாம் அதனைச் சுற்றி உள்ளவைகளை அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம்.
நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம். 
நிச்சயமாக உங்கள் இறைவன் செவியுறுபவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.
( அல் குர்ஆன் 17:1 )

நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் உடலுடன் சென்ற பயணம்.

ரஜப் 27 சனி  621 AC இரவில் நபிப் பட்டத்திற்கு பின் ஹிஜ்ரத்துக்கு முன் நிகழ்ந்தது.

முதல் பகுதி இஸ்ரா மக்கா அல் ஹரம் முதல் பாலஸ்தீன் அல் அக்ஸா வரை
இரண்டாம் பகுதி மிஃராஜ் அல் அக்ஸா முதல் வானுலகம் வரை

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி வந்தார்கள்
( ஸஹீஹ் முஸ்லிம் 263 )

ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது உண்மையான தோற்றத்தில்) பார்த்தார்கள். 
( நூல்:புகாரி : 4856 ) 

ஜிப்ரயீல்(காப்ரியல்)(அலை) அல்லாஹ்வின் ஸலாமை எத்திவைத்து அழைப்பு கொடுக்கிறார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் இருதயம் பிளக்கப்பட்டு ஜம் ஜம் நீரால்கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் , நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்… அல்லது ஹிஜ்ரில்… படுத்துக் கொண்டிருந்தேன். 
அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.
நெஞ்சின் காறை யெலும்பிலிருந்து அடிவயிறு வரை… அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை… 
பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார்.
பிறகு அதை “ஸம்ஸம்” நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து 
என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே) நெஞ்சை மூடிவிட்டார்.
( ஸஹீஹ் முஸ்லிம் 263 ) ( ஸஹீஹ் புகாரி 3887 )

ஜிப்ரீல்(அலை) அவர்கள் புராக், கழுதைக்கும் குதிரைக்கும் இடைப்பட்ட ஒளியாலான வாகனத்தை கொண்டு வந்தார்கள்.

அந்த வாகனம் தனது பார்வை எட்டுகிற தூரத்திற்கு தனது கால் குளம்பை எடுத்து வைத்தது. 
( நூல்:முஸ்லிம் : 25 )

மதினாவில் இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
நாயகம் (ஸல்) அவர்களை அடக்கம் செய்துள்ள தற்போதய இடம்.

தூர்ஸினா மலையில் இரண்டு ரக்அத் தொழுதார்கள்
மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் பேசிய இடம்

பைத்துல் லஹ்மே (பெத்தல ஹேம்) வில் இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
ஈஸா (அலை) அவர்கள் பிறந்த‌ இடம்.

வழியில் அவர்கள் கண்ட காட்சிகள்

தொழுகையை விட்டவன் தலையை உடைப்பதைப் பார்த்தார்கள்

தருமம் செய்யாத கஞ்சன் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

ஹராமான காரியங்களைச் செய்தவர்கள் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

தான் அமல் செய்யாமல் பிறருக்கு உபதேசம் மட்டும் செய்பவர்கள் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

கண‌வனின் உரிமையை மீறிய பெண் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

புறம் பேசியவர்கள் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

பைத்துல் மக்திஸிற்கு அருகில் உள்ள செம்மணற் குன்றிற்கருகில் மூஸா (அலை) அவர்கள் தொழுது கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். 
( நூல் : நஸயீ 1614 )

நபி(ஸல்) அவர்களிடம் பால் கிண்ணம், தேன் கிண்ணம், மது கிண்ணம் ஆகி யவை கொண்டு வரப்பட்டது. அதில் பால் கிண்ணத்தை நபி(ஸல்) அவர்கள் தேர்வு செய்து பிறகு அதிலுள்ள பாலை பருகினார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் இயற்கை மரபில் உங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நீங்கள் மது கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறி போயிருக்கும் என்று கூறினார்கள். 
( நூல்: புகாரி : 5576, 5610 )

புராக்கை தூணில் கட்டினார்கள். 
( நூல் : முஸ்லிம் : 259 )

அனைத்து நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழ வைத்தார்கள்.

பிறகு அங்கிருந்து  மிஃராஜிர்கு புறப்பட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஏழு வானங்களை கடந்து சென்றார்கள். 
( நூல்:புகாரி : 3207 )

நபிகளாரின் சந்திப்பு

1 ஆம் வானத்தில் ஆதம்(அலை)

2 ஆம் வானத்தில் யஹ்யா(அலை), ஈஸா(அலை)(ஜீஸஸ்)

ஈஸா (அலை) அவர்களையும் அல்லாஹ் பூத உடலோடுதான் இரண்டாம் வானத்தில் உயர்த்தி இருக்கிறான்.

3 ஆம் வானத்தில் யாகூப்(அலை)(ஜேக்கப்) யூசுஃப்(அலை) சுலைமான்(அலை)(சாலமன்) தாவூது(அலை)(டேவிட்)

4 ஆம் வானத்தில் இத்ரீஸ்(அலை)

5 ஆம் வானத்தில் ஹாரூன்(அலை)

6 ஆம் வானத்தில் மூஸா(அலை)

7 ஆம் வானத்தில் பைத்துல் மாமுர் பள்ளியில் இப்ராஹிம்(அலை)
( நூல்:முஸ்லிம்:259 )

நபிமார்களை சந்தித்து உரையாடினார்கள்
( நூல்:புகாரி : 3207 )

நரகத்தின் தலைவர் வானவர் மாலிக் அவர்களை சந்தித்தார்கள்.
( நூல் : முஸ்லிம் : 267 )

நரக வேதனைகள் காட்டப்பட்டன.

நரகத்தையும் எட்டிப் பார்த்தார்கள் அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையேப் பார்த்தார்கள்.
( நூல் : முஸ்லிம் : 267 )

மனிதர்களை துன்புறுத்தியவர்கள்,
பிறர் பொருளை அபகரித்தவர்கள்,
அனாதைகளை ஏமாற்றியவர்கள்,
வட்டி வாங்கியவர்கள்,
தவறான நீதி வழங்கியவர்கள்,
தடை செய்த பொருள்களை சாப்பிட்டவர்கள்,
சுத்தத்தை பேணாதவர்கள்,
மகா பொய்யனும் குழப்பவாதியுமான தஜ்ஜாலையும் பார்த்தார்கள். 
( நூல் : முஸ்லிம் : 267 )

இவர்களுக்கு அளிக்கப்படும் வேதனைகளைப் பார்த்தார்கள்

சுவர்க்கத்தின் வானவர் தலைவர் ரிழ்வான் அவர்களை சந்தித்தார்கள்

சுவனத்தை எட்டிப் பார்த்தார்கள். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே பார்த்தார்கள். 

முத்துக்களால் உள்ள கயிறுகளையும் பார்த்தார்கள். சுவனத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது.

சுவ‌ர்க்கச் சோலைகள், ஹூருல் ஈன்கள் (சொர்க்க கன்னிகள்), ஹவ்லுல் கவ்தர் (நீர்த் தடாகம்) காட்டப்பட்டன.
( நூல் : புகாரி : 6581 )

ஜிப்ரயீல் அவர்களின் எல்லை முடிவுற்றது. இனி தன்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. மீறினால் எரிந்து சாம்பலாகி விடுவேன். என்றார்கள்

மேலும், நாம் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்.
(அல்குர்ஆன் : 19:57) 

சித்ரத்துல் முந்தஹா (இலந்தை மரம்) வை அடைந்தார்கள்.

சித்ரத் என்றால் இலந்தை மரம். முன்தஹா என்றால் முடிவு, எல்லை என்பதாகும்.

சித்ரதுல் முன்தஹா என்பது ஆறாம் வானத்தில் தொடங்கி ஏழாம் வானம் வரை நீண்டிருக்கும் பிரமாண்ட மரமாகும்.
( புகாரி-349: )

அங்கிருந்த இலந்தை மரத்தின் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றிருந்தது 
அதன் பழங்களை கூஜாக்களை போன்று (பெரிதாக) இருந்தது. பிறகு
( அல் குர்ஆன் 53:14 ) ( நூல்:முஸ்லிம்:259 )

(அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. 
இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. ‘ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?’ என்று கேட்டேன். 
அவர், ‘உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும். 
வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.
( ஸஹீஹ் புகாரி 3887 )

காபகவுஸைனி அவ் அத்னா(சமீப சமூக ஸ்தானம்)தலம் அடைந்தார்கள்
( அல் குர்ஆன் 53:9 )

சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான 
(இறை)வன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான். 
( ஸஹீஹ் புகாரி 7517 )

முஹம்மதே உம்மை விட்டும் உமது திரையை நீக்கினோம். இன்று உமது பார்வையானது கூர்மையுடையதாகும்.
( அல் குர்ஆன் 50:22 )

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.
( அல் குர்ஆன் 6:103 )

“அல்லாஹ் (நேருக்கு நேர்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒருவருக்குமில்லை எனினும் வஹீயின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது வானவர்களை அனுப்பி வைத்து வஹீயின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை(மனிதனுக்கு) அறிவிக்கிறான். நிச்சயமாக அவன் மிக மேலானவன், மிக ஞானமுடையவன். 
( அல் குர்ஆன் 42:51 )

அல்லாஹ்வின் நூரை-ஒளியை புறக் கண்களால் தரிசித்தார்கள்.

அல்லாஹ் வானங்கள் பூமியின் ஒளியாய் இருக்கிறான்.
அது ஒளிக்கு மேல் ஒளியாகும்
( அல் குர்ஆன் 24:35 )

ஸுஜூது செய்தார்கள்

நபிகள்(ஸல்) அவர்கள்:கூறினார்கள்
வண‌க்கங்களும், வாழ்த்துகளும் அல்லாஹ்வுக்கே உரியன.
அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யி பாத்து

அல்லாஹ்:கூறினான்
நபியே உங்கள் மீது அல்லாஹ்வின் ஸலாமும், அருளும், பரக்கத்தும் உண்டாவதாக.
அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்து லில்லாஹி வபரகாத்துஹு

நபிகள்(ஸல்)  அவர்கள்:கூறினார்கள்
உனது ஸலாம் என் மீதும், வணங்கும் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக.
அஸ்ஸலாமு அலைய்னா வ அலா இபாதிலாஹிஸ் ஸாலிஹிய்ன்.

ஜிப்ரயீல்(அலை)  அவர்கள்:கூறினார்கள்
வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
நாயகம்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன்.
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரசூலுஹு

அல்லாஹ் மூன்று அன்பளிப்புகளைக் கொடுத்தான்.

1. (50 நேரத் தொழுகைகள் பிறகு) ஐந்து நேரத் தொழுகைகள்,
2. அல்பகரா அத்தியாயத்தின் கடைசி 2 வசனங்கள்.  ( அல் குர்ஆன் 2:285, 286 )
3. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் இறந்தவருக்கு பெரும் பாவங்கள் மன்னிக்கப்படும்.
( நூல்:நஸாயீ:447 )

வழங்கப்பட்ட 50 நேரத் தொழுகைளை 5 ஆக குறைத்த விதம்.

1 ஆம் முறை 50 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

2 ஆம் முறை 40 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

3 ஆம் முறை 35 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

4 ஆம் முறை 30 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

5 ஆம் முறை 25 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

6 ஆம் முறை 20 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

7 ஆம் முறை 15 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

8 ஆம் முறை 10 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

9 ஆம் முறை 5 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.

தன் நேசரை பிரிய மனமில்லாமல் அல்லாஹ் திரும்ப திரும்ப அழைத்து பேசி மகிழ்ந்தான்.

திரும்ப‌வும் குறைப்பதற்கு வெட்கப்பட்டு பெற்ற‌ அன்பளிப்போடு பைத்துல் முஅஹத்தஸ் திரும்பினார்கள்.
(ஸஹீஹ் புகாரி 3887)

மீண்டும் புராக்கில் பைத்துல் ஹரம் திரும்பினார்கள்.

நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். 
அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். 
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீரை அருந்திவிட்டு 
மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), 
காலையில் மக்களுக்கு இப்பிரயாணக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை 
என்பதற்குரிய மிகப்பெரியஆதாரமாக அமைந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

முதலில் சிறிய தகப்பனார் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள்.

சிறிய தந்தையார் ( அபூ தாலிப் ) மகள் உம்முஹானி(ர‌லி) அவர்களின் வீட்டில் பிரவேசித்து அவர்களிடமும் சொன்னார்கள்.

காஃபாவில் அபூஜஹ்லிடம் நடந்ததைச் சொன்னார்கள்.

அபூஜஹ்ல் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் சொன்னான். எந்த மறுப்புமின்றி உடனே ஏற்றதால் சித்தீக்(உண்மையாளர்) ஆனார்கள்.

 


Thanks to: 

jumuaamedai.wordpress.com, sufimanzil.org

17-07-1442 AH  ரஜப்                       abdulmalick2(at)gmail.com                     01-03-2021  CE

 

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

... உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam Your browser should support iFrame to view this PDF document abdulm...