...
உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்)
Food Discipline in Islam
...
துவா செய்ய பழகிக் கொள்வோம்.
துவா என்றால் பிரார்தனை, வேண்டுதல், தேவைகளை கேட்டுப் பெருதல் என்று பொருள்படும்.
இறைவனுக்கு உரிய கடமைகளைச் செய்தபின் செய்ய வேண்டிய ஒரு அமல்.
துவா ஒரு வணக்கமாகும்.
செருப்பின் வார் அறுந்து விட்டால் கூட அல்லாஹ்விடம் துவா செய்ய வேண்டும்.
துவாவை அதற்குறிய முறையில் செய்ய வேண்டும்.
துவா எப்படி செய்வது?
அதையும் இறைவனே நமக்கு கற்றுத் தருகிறான்.
நம் குழந்தைகளுக்கு துவா செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் பெற்றோர்களுக்காக செய்யும் துவாவை இறைவன் உடனே ஏற்றுக் கொள்கிறான்.
அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும்.
கிப்லாவை முன்னோக்க வேண்டும்.
கைகளை உயர்த்திக் கேட்க வேண்டும்.
எளிமையான முறை
1. அல்லாஹ்வைப் புகழ்வது.
2. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
3. இம்மைக்கும் மறுமைக்கும் சேர்த்து ஒரே துவா செய்வது.
4. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
5. அல்லாஹ்வைப் புகழ்வது.
உதாரணமாக
லகல் ஹம்து லக சுக்ரு யா அல்லாஹ்.
அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.
அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதா பன்னார்.
வ ஸல்லல்லாஹு தஆலா வ ஸல்லமலா கைய்ரி கல்கிகி சைய்யதினா முஹம்மதின் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயின்.
சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மா யஸிஃபூன் வ ஸலாமுன் அலல் முர்ஸலிய்ன்
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்.
விரிவான முறை
1. அல்லாஹ்வைப் புகழ்வது.
2. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
3. ஈமானை பலப்படுத்துதல்.
4. தனக்காகவும், மற்ற அனைவர்களுக்காவும் பாவ மன்னிப்பு தேடுதல்.
5. சக்கராத்து மற்றும் கப்று அதாபுகளை விட்டு பாதுகாப்பு தேடுதல்.
6. கேள்விக்கணக்கு நாளை எண்ணி பாதுகாப்பு தேடுதல்.
7. உலகத்தின் செயல்களுக்கு பாதுகாப்பு தேடுதல்.
8. உறவினற்களுக்காக துவா செய்தல்.
9. நமக்கு உதவியவர்களுக்காக துவா செய்தல்.
10. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
11. அல்லாஹ்வைப் புகழ்வது.
உதாரணமாக
லகல் ஹம்து லக சுக்ரு யா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்.
அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.
ரப்பனா லா துஆஹித்னா இன்னஸிய்னா அவ் அஹ்தஹ்னா
ரப்பனா வலா தஹ்மில் அலைய்னா இஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லதிய்ன மி கப்லினா
ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாகதலனா பிஹி
வ அஃபு அன்னா
வக் பிர்லனா
வர் ஹம்னா
அன்த மவ்லானா
ஃபன்சுர்னா
அலல் கவ்மில் காஃபிரிய்ன் (அல்குர்ஆன் 2: 286)
ரப்பனா லா துஜிய் குலுவ்பனா பஅத இத் ஹதய்தனா வ ஹப்லனா மில்லதுன்க ரஹ்மத்தன் இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப் (அல்குர்ஆன் 3: 8)
ரப்பனா ளலம்னா அன்ஃபுஸனா வ இன் லம் தக்ஃபிர்லனா வ தரஹம்னா லனக்கூனன்ன மினல் ஹாஸிரிய்ன் (அல்குர்ஆன் 7: 23)
இன்னிய் வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லஜிய் ஃபதரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனிய்ஃபன் வமா அனா மினல் முஷ்ரிகிய்ன் (அல்குர்ஆன் 6: 79)
ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ அலைய்ஹி தவக்கல்த்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளிய்ம் (அல்குர்ஆன் 9: 129)
லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னிய் குன்து மினள் ளாலிமிய்ன். (அல்குர்ஆன் 14: 38)
ரப்பி ஜஅல்னிய் முகிய்மஸ் ஸலாத்தி வ மின் துர்ரிய்யத்திய் ரப்பனா வ தக்கபல் துஆ
ரப்பனக் ஃபிர்லிய் வலி வலி வாலிதய்ய வலில் முக்மினிய்ன யவ்ம யகூமுல் ஹிஸாப் (அல்குர்ஆன் 14: 40, 41)
ரப்பிர் ஹம்ஹுமா கமா ரப்ப யானிய் ஸகிய்ரா (அல்குர்ஆன் 17: 24)
ரப்பிஷ் ரஹ்லிய் ஸத்ரிய் வ யஸ்ஸிர்லிய் அம்ரிய் (அல்குர்ஆன் 20: 25, 26)
ரப்பி ஜித்னிய் இல்மா (அல்குர்ஆன் 20: 114)
ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜிய்னா வ துர்ரிய் யாத்திய்னா குர்ரத்த அயுனின் வஜ்அல்னா லில் முத்தகிய்ன இமாம (அல்குர்ஆன் 25: 74)
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகிய்னா அதாபன்னார் (அல்குர்ஆன் 2: 201)
ரப்பனா தகப்பல் மின்னா இன்னக்க அந்த ஸமிய்உல் அளிய்ம்.
வ துப் அலைனா இன்னக்க அந்தத் தவ்வாபுர் ரஹிய்ம். (அல்குர்ஆன் 2: 127-128)
வ ஸல்லல்லாஹு தஆலா வ ஸல்லமலா கைய்ரி கல்கிகி சைய்யதினா முஹம்மதின் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயின்.
சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மாயஸிஃபூன்.
வ ஸலாமுன் அலல் முர்ஸலிய்ன்.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமிய்ன். (அல்குர்ஆன் 37: 180, 181, 182)
இன்னும் சற்று விரிவான முறையில் தமிழில் துவா
லகல் ஹம்து லக சுக்ரு யா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்.
அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.
யா அல்லாஹ்
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.
உன்னை அதிகம் அதிகமாக புகழக்கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகமாக ஸலவாத்து சொல்லக்கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்ககூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
தொழுகையை உள்ளச்சத்தோடு உன்னில் லயித்து தன்னை மறந்து அந்த உயிருள்ள தொழுகையைத் தொழுகக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
நோன்புகளை பரிபூரணமாக நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
ஜக்காத்தை முழுமையாக நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
ஹஜ்ஜை நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
உம்ராவை நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
நாயகம் (ஸல்) அவர்களை கனவிலும் நனவிலும் தரிசனம் செய்யக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
என்னுடயை பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் தாய் தந்தையர் உடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் மனைவி, மக்கள் உடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் உற்றார் உறவினர் உடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் ஆசிரியர்கள் உடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
உலகில் உள்ள உண்மையான முஸ்லிம்கள், முஃமின்கள் உடைய பாவங்கள் ..அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
இறந்த என் முன்னோர்கள் உடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
அவர்களுடைய கப்ரை விரிவாக்குவாயாக.
அவர்களுடைய வேதனையை நீக்கி அருள்வாயாக.
அவர்களுடைய கப்ரின் பக்கம் சொர்க்கத்தின் காற்றை திறந்து விடுவாயாக.
அவர்களுக்கு சொர்க்கத்தின் ஆடையை அணிவிப்பாயாக.
வயது முதிர்ந்த முதுமைப் பருவத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
சக்கராத்துடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
கப்றுடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
கேள்விக் கணக்கை இலேசாக்குவாய் ரஹ்மானே.
மறுமை நாளில் உன்னுடைய அர்ஷ் உடைய நிழலில் எங்களுக்கு இடம் கொடு ரஹ்மானே.
நாயகம் (ஸல்) அவர்கள் கரங்களால் கவ்லுல் கவ்தர் நீரைப் பருகக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
யா அல்லாஹ்
நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தெடுகிறேன்.
சொர்க்கத்தை உன்னிடம் ஆதரவு வைக்கிறேன்.
ஸிராத்துல் முஸ்தகிய்ம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பதற்கு அருள் செய்வாய் ரஹ்மானே.
சொர்க்கத்தில் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நானும், என் குடும்பத்தினர் அனைவரும் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து இருக்க கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
கடனில்லாத வாழ்க்கையை கொடு ரஹ்மானே
வட்டியில்லாத வாழ்க்கையை கொடு ரஹ்மானே
நோயில்லாத வாழ்க்கையை கொடு ரஹ்மானே
ஹலால் ஹராமை பேணி நடக்க கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
பொய் சொல்வதை விட்டும், கோள் சொல்வதை விட்டும், பொறாமை கொள்வதை விட்டும், தற்பெருமையை விட்டும், ஆணவத்தை விட்டும், திமிரை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன்.
ஷைத்தான், நஃப்ஸு, மனிதர்கள், ஜின்கள், பூச்சிகள், விலங்குகள் மற்றும் அனைத்து விதமான தீங்குகளை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன்.
குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
குர்ஆனை மனனம் செய்யக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக
குர்ஆனை எங்களுக்கு கப்ரில் ஒளியாகவும், மறுமையில் எங்களுக்காக ஷஃபாத்து செய்யக் கூடியதாகவும் ஆக்குவாயாக.
குர்ஆனை கொண்டு எங்கள் நோய்களுக்கு ஷிஃபா தருவாயாக.
என் சகோதர சகோதரிகளுக்கு உடல் நலத்தைக் கொடு ரஹ்மானே.
அவர்களுடைய ஹலாலான தேவைகளை நிறைவேற்றிக் கொடு ரஹ்மானே.
உன்னை வணங்குவதற்கு எனக்கு யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்களுடைய பாங்களை எல்லாம் மன்னித் தருள்வாயாக.
அவர்களுடைய வணக்கங்களின் குறைபாடுகளை நீக்கி பரிபூரண வணக்கங்களாக ஏற்றுக் கொள்வாயாக.
இந்த துவாக்கள் அனைத்தையும் நாயகம் (ஸல்) அவர்களின் துவா பரக்கத்தினால் ஏற்று நிறைவேற்றிக் கொடுப்பாயாக.
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகிய்னா அதாபன்னார் (அல்குர்ஆன் 2: 201)
ரப்பனா தகப்பல் மின்னா இன்னக்க அந்த ஸமிய்உல் அளிய்ம்.
வ துப் அலைனா இன்னக்க அந்தத் தவ்வாபுர் ரஹிய்ம். (அல்குர்ஆன் 2: 127-128)
வ ஸல்லல்லாஹு தஆலா வ ஸல்லமலா கைய்ரி கல்கிகி சைய்யதினா முஹம்மதின் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயின்.
சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மாயஸிஃபூன்.
வ ஸலாமுன் அலல் முர்ஸலிய்ன்.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமிய்ன். (அல்குர்ஆன் 37: 180, 181, 182)
Thanks to:
09-07-1442 AH, Rajab abdulmalick2(at)gmail.com 21-02-2020 CE