.

...

 


Print Friendly, PDF & Email

 

Wednesday, June 2, 2021

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

...

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்)

Food Discipline in Islam

abdulmalick2(at)gmail.com

...

Monday, April 5, 2021

Taravih tamil tasbih text

...

Taravih tamil tasbih text தராவீஹ் தொழுகையின் தமிழ் தஸ்பீஹ்

abdulmalick2(at)gmail.com

...

Sunday, March 21, 2021

பராஅத், பராத், ஷஃபே பராத், ஷஃபே பராஅத், பாக்கியம் நிறைந்த இரவு


Print Friendly, PDF & Email

 

பராஅத், பராத், ஷஃபே பராத், ஷஃபே பராஅத், பாக்கியம் நிறைந்த இரவு.

 

பராஅத், பராத், ஷஃபே பராத், ஷஃபே பராஅத், பாக்கியம் நிறைந்த இரவு.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 

حمِ
ஹா, மீம்.  (44:1)
ஹா, மீம்.  (44:1)

وَالْكِتَابِ الْمُبِينِِ
வல் கிதாபில் முபிய்ன்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!  (44:2)

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَِ
இன்னா அன் ஜல்னாஹு ஃபிய் லைலத்தின் முபாரக்கத்தின் இன்னா குன்னா முந்திரிய்ன்
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.  (44:3)

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍِ
ஃபிய்ஹா யுஃப்ரஹு குல்லு அம்ரின் ஹக்கிய்ம்
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.  (44:4)
(குர்ஆன் 44:1, 2, 3, 4.)

இந்த ஆயத்தின் விளக்கத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் சரியான விளக்கத்தை அல்லாஹுவே அறிவான்.

இந்த ஆயத்தில் பராஅத் இரவைப் பற்றியே அல்லாஹ் சொல்வதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்


لِكُلِّ أَجَلٍ كِتَابٌِ
يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ ۖ 

லி குல்லி அஜலின் கிதாப்
யம்ஹு ல்லாஹு மா யஷாஉ வ யுஸ்பித்
“ஒவ்வொன்றுக்கும் தவணை (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது எனினும் அல்லாஹ் அவன் நாடியதை (அதில்) அழித்து விடுவான். 
(அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது” 
(அல் குர்ஆன். 13:38,39).


هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ ثُمَّ قَضَىٰ أَجَلًا ۖ
ஹுவல்லதிய் க்ஹலக்ககும் மின் திய்னிய்ன் ஸும்ம களயா அஜளன்
“அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) தவணையை 
(வாழ்நாளைக்குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” 
(அல் குர்ஆன். 6:2)


أَرَأَيْتَ الَّذِي يَنْهَىِٰ
عَبْدًا إِذَا صَلَّىِٰ

அர அய்தல்லதிய் யன்ஹா
அபதன் இஜா ஸல்லா
“(நபியே!) ஒர் அடியார் தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?” 
(அல் குர்ஆன்: 96:9,10)

فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ
ஃபஸ்தபிகுல் க்ஹய்ராத்
“நன்மைகளை செய்வதில் இறை அருளைப் பெறுவதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 2:148. 

وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا
வ ஸாரிஉ இலயா மக்ஃபிரத்தின் மின் ரப்பிக்கும் வ ஜன்னத்தின் அர்ளுஹா
“உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சுவர்கத்துக்கும் விரைந்துசெல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 3:133 


مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ۖ 
மன் ஜாஅ பில் ஹசனத்தி ஃபலஹு அஷ்ரு அம்ஸலிஹா
“எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. (அல் குர்ஆன் 6:160).

மேற்கூறப்பட்ட ஆயத்துகள் அனைத்தும் இந்த இரவுக்கும் அதன் செயல்களுக்கும் தொடர்புடயவை.

ஒன்றும் செய்யாமல் நேரத்தை வீணாக்குவதை விட அமல்களில் கவனம் செலுத்துவது சிறந்த செயலாகும்.

பராஅத் இரவில் பாக்கியமிழக்கும் பாவிகள்:
“ஷஃபான் 15-வது இரவு அல்லாஹ் தனது படைப்புகளுக்கு பிரசன்னமாகி அவனது அனைத்து அடியார்களையும் மன்னிக்கிறான்” 
என்று அறிவித்த அண்ணலார் (ﷺ) அவர்கள் இதில் விதி விலக்கானவர்களையும் பட்டியலிடுகிறார்கள் அவர்கள் வருமாறு:-
1, இறை மறுப்பாளர்கள்
2, இறைவனுக்கு இணை வைப்பவர்கள்
3, விரோதம் கொண்டிருப்பவர்கள்
4, தற்கொலை செய்தவர்கள்
5, உறவுகளைத் துண்டித்தவர்கள்
6, தாய் தந்தையருக்கு மாறு செய்து நோவினை செய்தவர்கள்
7, குடிகாரர்கள்
8, கரண்டைக்குகீழே உடை உடுத்தி இருப்பவர்கள்
9, சதிகாரர்கள்
10, சூனியம் செய்பவர்கள்

பராஅத் இரவு பரக்கத் பொருந்திய இரவு.

பராஅத் இரவில்தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும்

பராஅத் இரவில்தான் அவர் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்படும்.

பராஅத் இரவில்தான் அவர் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும்.

பராஅத் அன்று நோன்பு வைப்பது நஃபிலான அமல்.

நிஸ்ஃபு ஷஃபான் என்றால், ஷஃபானின் பாதி அதாவது 15 வது இரவு, பராஅத் இரவு, என்றால் விடுதலை இரவு

இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, 
லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, 

கடமையில்லாத விரும்ப‌த்தக்க நல்ல செயல்கள்
மக்ரிபுத் தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஸுறா ஓதி துஆ செய்வது.
இஷா தொழுகைக்குப் பிறகு கப்ரு ஜியாரத் செய்வது.
பஜ்ரு வரை அல்லது முடிந்த வரை நின்று, இருந்து இறை வணக்கம் புரிவது.
அன்று பகலில் நோன்பு வைப்பது.

ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) மறுக்கப்படும்

ஆடுகளின் ரோமங்களின் அளவு மக்கள் அல்லாஹ்வால் நரக விடுதலை அளிக்கப்படுவார்கள்

“குர்’ஆன் ஓதி அதைக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்”. நபி மொழி பதிவு திர்மிதி 2917. மிஷ்காத் 2210.

“எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நபி மொழி. தாரமி: 3418. மிஷ்காத்: 2171).

“குர்ஆன் ஒதும் மஜ்லிஸில் மலக்குகள் இறங்குவர்” புகாரி

“யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” 
இப்னு அப்பாஸ் (ரலி) 

பராஅத் துவா:  நீ எங்களைப் பாக்கியவான்களாக ஆக்கி அதை அப்படியே உறுதிப்படுத்துவாயாக.

கழா கத்ரு மாறுமா? மாறாது. ஆனால் சில நன்மையான‌ விஷயங்கள் அதை மாற்றும்.

 
 

Thanks to: Internet Friends

07-08-1442 AH  ஷாபான்                       abdulmalick2(at)gmail.com                     21-03-2021  CE

 

Saturday, March 13, 2021

12-03-2021, இன்று ப‌யானில் கேட்ட முக்கிய கருத்துகள்.

 

12-03-2021, இன்று ப‌யானில் கேட்ட முக்கிய கருத்துகள்

12-03-2021, இன்று ப‌யானில் கேட்ட முக்கிய கருத்துகள்.

மிஃராஜின் போது அல்லாஹ் நபி(ஸல்) அவர்களிடம் 
5 நேரத் தொழுகைகளை நிறைவேற்றினால் 50 நேரத்தொழுகைக்கான நன்மைகள் தருவேன் என்று கூறினான்.

நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு மிஃராஜிர்காகவும் நோன்பு வைக்கவுமில்லை. சிறப்புத் தொழுகை தொழவுமில்லை.

உமர்(ரலி) அவர்களின் நாக்கில் அல்லாஹ் பேசுகிறான். (ஹதீஸ்)

உமர்(ரலி) அவர்கள் 
மிஃராஜ் அன்று மிஃராஜிர்காக நோன்பு வைக்கிறேன் என்ற நிய்யத்தோடு நோன்பு நோற்பதை தடை செய்தார்கள்.

மிஃராஜ் தினத்தன்று நோன்பு வைத்த ஒரு நபரின் நோன்பை முறிக்கச் செய்தார்கள்.
ரஸுல்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை செய்வதை விட்டும் தடுத்தார்கள்.

அலி(ரலி) அவர்களைப் பற்றி ஒரு ஹதீஸ்.
நான் அறிவின் பட்டணம் என்றால் அலி அதன் நுழைவு வாயில்.
ஆக அறிவில், ஞானத்தில் சிறந்தவர் அவர்.
அவரே தொழுகையின் போது தொப்புழின் மீது கைகட்டி நிற்பார்கள்.

அலி(ரலி) அவர்கள் கூறியது.
நான் அல்லாஹ்விடம் பேச விரும்பினால் குர்ஆன் ஓதுவேன்.
அல்லாஹ் என்னிடம் பேசுவதை கேட்க விரும்பினால் தொழுகுவேன். என்றார்கள்.

தொழுகை முஃமினுக்கு மிஃராஜாகும்.

இஹ்ஸான்.
ஜிப்ரயீல்(அலை) அவர்கள் கூறியதாவது.
இஹ்ஸான் என்பது தொழுகையில் அல்லாஹ்வைப் பார்த்து வணங்குவதாகும்.
அப்படி முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்று மனதில் உறுதியாக நினைத்து தொழுவதாகும்.

குர்ஆன்
தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

அந்த அந்த நேரத்தில் தொழுவதுதான் சிறப்பாகும்.

தொழுகையை தவற விட்டு விட்டு அந்த நேரத்தில் வியாபாரத்தில் இருந்தால் பணம் அதிகமாக கிடைத்தாலும் அதில் பரக்கத் இருக்காது.

தொழுகையின் போது காலை விரித்து நிற்கக் கூடாது.

தக்பீர் சொல்லும் போது இரு உள்ளங்கைகள் கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

தொழுகையில் அடிக்கடி தக்பீர் சொல்லக் கூடாது.

காலின் பெரு விரல் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்க வேண்டும்.

ஸ‌ஃப்ஃபை சரி செய்ய குதிகால்களைப் பார்க்க வேண்டும்.

நிலையின் போது ஸஜ்தாவுடைய இடத்தில் பார்வை இருக்க வேண்டும்.

ருக்உ வில் முதுகை தட்டையாக வைக்க வேண்டும்.

ருக்உ வில் காலின் பெருவிரல் மீது பார்வை இருக்க வேண்டும்.

காஃபிர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வேறுபாடாய் இருப்பது தொழுகைதான்.

நம்மைப் போல் காஃபிர்களும் தொப்பி அணிகிறார்கள்.

நம்மைப் போல் காஃபிர்களும் தாடி வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொழுவதில்லை.

சூரா அல் முத்ததிர் அத்தியாயத்தில் 74:42 முதல் 74:47 வரை உள்ள வசனத்தில் தொழுகையை விட்டவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

சுவர்க்க வாசிகள் ஸகர் என்னும் நரகத்தில் உள்ளவர்களிடம் விசாரிப்பார்கள்.

உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?(என்று கேட்பார்கள்.)

அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

"அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. 

(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்

"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).

 

Thanks to: Imaam kulam hussain mosque

27-07-1442 AH  ரஜப்                       abdulmalick2(at)gmail.com                     12-03-2021  CE

 

Sunday, March 7, 2021

99 names of allah asma pdf

...

99 names of allah asma

abdulmalick2(at)gmail.com

...

Monday, March 1, 2021

நபிகள்(ஸல்) அவர்களின் இஸ்ரா மிஃராஜ் விண்ணேற்றம்

நபிகள்(ஸல்) அவர்களின் இஸ்ரா மிஃராஜ் விண்ணேற்றம்.

இது கனவில் நடந்ததாக இருந்தால் குறைஷிகள் மறுத்திருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் கனவு எல்லோரும் காணக் கூடியதே.

வெறும் கனவாய் இருந்தால் இதில் ஒன்றும் அதிசயம் இல்லை.
தங்கள் பூத உடலோடு சென்றதால்தான் இது அதிசயமானது.
எந்த நபிமார்களுக்கும் கிடைக்காத ஒரு அற்புதமாக இருக்கிறது.

அபூஜஹ்ல் கிண்டல் செய்திருக்க மாட்டான். குறைஷிகள் நம்ப மறுத்ததோடு கிண்டல் செய்தனர். 
( நூல் : புகாரி : 3886 )

முஸ்லிம்களில் உள்ள முனாஃபிக்குகளை கண்டு பிடிக்க இது வாய்ப்பாக அமைந்தது.

நபியே நாம் (இஸ்ரா மிஃராஜின் போது) உமக்கு காட்டிய காட்சிகளை மக்களுக்கு (அவர்களின் ஈமானை அறிய ) ஒரு பரிட்சையாகவே அமைத்தோம்.
( அல் குர்ஆன் 17:60 )

அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். 
அவன் முஹம்மது (ஸல்) என்னும் தன் அடியாரை 
(காஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (வெகு தூரத்திலுருக்கும் பைத்துல் முக‌த்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு 
ஒரே இரவில் அழைத்துச் சென்றான். 
அவ்வாறு அழைத்துச் சென்ற நாம் அதனைச் சுற்றி உள்ளவைகளை அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம்.
நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம். 
நிச்சயமாக உங்கள் இறைவன் செவியுறுபவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.
( அல் குர்ஆன் 17:1 )

நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் உடலுடன் சென்ற பயணம்.

ரஜப் 27 சனி  621 AC இரவில் நபிப் பட்டத்திற்கு பின் ஹிஜ்ரத்துக்கு முன் நிகழ்ந்தது.

முதல் பகுதி இஸ்ரா மக்கா அல் ஹரம் முதல் பாலஸ்தீன் அல் அக்ஸா வரை
இரண்டாம் பகுதி மிஃராஜ் அல் அக்ஸா முதல் வானுலகம் வரை

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி வந்தார்கள்
( ஸஹீஹ் முஸ்லிம் 263 )

ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது உண்மையான தோற்றத்தில்) பார்த்தார்கள். 
( நூல்:புகாரி : 4856 ) 

ஜிப்ரயீல்(காப்ரியல்)(அலை) அல்லாஹ்வின் ஸலாமை எத்திவைத்து அழைப்பு கொடுக்கிறார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் இருதயம் பிளக்கப்பட்டு ஜம் ஜம் நீரால்கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் , நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்… அல்லது ஹிஜ்ரில்… படுத்துக் கொண்டிருந்தேன். 
அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.
நெஞ்சின் காறை யெலும்பிலிருந்து அடிவயிறு வரை… அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை… 
பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார்.
பிறகு அதை “ஸம்ஸம்” நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து 
என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே) நெஞ்சை மூடிவிட்டார்.
( ஸஹீஹ் முஸ்லிம் 263 ) ( ஸஹீஹ் புகாரி 3887 )

ஜிப்ரீல்(அலை) அவர்கள் புராக், கழுதைக்கும் குதிரைக்கும் இடைப்பட்ட ஒளியாலான வாகனத்தை கொண்டு வந்தார்கள்.

அந்த வாகனம் தனது பார்வை எட்டுகிற தூரத்திற்கு தனது கால் குளம்பை எடுத்து வைத்தது. 
( நூல்:முஸ்லிம் : 25 )

மதினாவில் இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
நாயகம் (ஸல்) அவர்களை அடக்கம் செய்துள்ள தற்போதய இடம்.

தூர்ஸினா மலையில் இரண்டு ரக்அத் தொழுதார்கள்
மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் பேசிய இடம்

பைத்துல் லஹ்மே (பெத்தல ஹேம்) வில் இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
ஈஸா (அலை) அவர்கள் பிறந்த‌ இடம்.

வழியில் அவர்கள் கண்ட காட்சிகள்

தொழுகையை விட்டவன் தலையை உடைப்பதைப் பார்த்தார்கள்

தருமம் செய்யாத கஞ்சன் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

ஹராமான காரியங்களைச் செய்தவர்கள் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

தான் அமல் செய்யாமல் பிறருக்கு உபதேசம் மட்டும் செய்பவர்கள் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

கண‌வனின் உரிமையை மீறிய பெண் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

புறம் பேசியவர்கள் கொடிய வேதனைக்குள்ளாக்க‌‌ப் ப‌டுவதைப் பார்த்தார்கள்.

பைத்துல் மக்திஸிற்கு அருகில் உள்ள செம்மணற் குன்றிற்கருகில் மூஸா (அலை) அவர்கள் தொழுது கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். 
( நூல் : நஸயீ 1614 )

நபி(ஸல்) அவர்களிடம் பால் கிண்ணம், தேன் கிண்ணம், மது கிண்ணம் ஆகி யவை கொண்டு வரப்பட்டது. அதில் பால் கிண்ணத்தை நபி(ஸல்) அவர்கள் தேர்வு செய்து பிறகு அதிலுள்ள பாலை பருகினார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் இயற்கை மரபில் உங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நீங்கள் மது கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறி போயிருக்கும் என்று கூறினார்கள். 
( நூல்: புகாரி : 5576, 5610 )

புராக்கை தூணில் கட்டினார்கள். 
( நூல் : முஸ்லிம் : 259 )

அனைத்து நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழ வைத்தார்கள்.

பிறகு அங்கிருந்து  மிஃராஜிர்கு புறப்பட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஏழு வானங்களை கடந்து சென்றார்கள். 
( நூல்:புகாரி : 3207 )

நபிகளாரின் சந்திப்பு

1 ஆம் வானத்தில் ஆதம்(அலை)

2 ஆம் வானத்தில் யஹ்யா(அலை), ஈஸா(அலை)(ஜீஸஸ்)

ஈஸா (அலை) அவர்களையும் அல்லாஹ் பூத உடலோடுதான் இரண்டாம் வானத்தில் உயர்த்தி இருக்கிறான்.

3 ஆம் வானத்தில் யாகூப்(அலை)(ஜேக்கப்) யூசுஃப்(அலை) சுலைமான்(அலை)(சாலமன்) தாவூது(அலை)(டேவிட்)

4 ஆம் வானத்தில் இத்ரீஸ்(அலை)

5 ஆம் வானத்தில் ஹாரூன்(அலை)

6 ஆம் வானத்தில் மூஸா(அலை)

7 ஆம் வானத்தில் பைத்துல் மாமுர் பள்ளியில் இப்ராஹிம்(அலை)
( நூல்:முஸ்லிம்:259 )

நபிமார்களை சந்தித்து உரையாடினார்கள்
( நூல்:புகாரி : 3207 )

நரகத்தின் தலைவர் வானவர் மாலிக் அவர்களை சந்தித்தார்கள்.
( நூல் : முஸ்லிம் : 267 )

நரக வேதனைகள் காட்டப்பட்டன.

நரகத்தையும் எட்டிப் பார்த்தார்கள் அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையேப் பார்த்தார்கள்.
( நூல் : முஸ்லிம் : 267 )

மனிதர்களை துன்புறுத்தியவர்கள்,
பிறர் பொருளை அபகரித்தவர்கள்,
அனாதைகளை ஏமாற்றியவர்கள்,
வட்டி வாங்கியவர்கள்,
தவறான நீதி வழங்கியவர்கள்,
தடை செய்த பொருள்களை சாப்பிட்டவர்கள்,
சுத்தத்தை பேணாதவர்கள்,
மகா பொய்யனும் குழப்பவாதியுமான தஜ்ஜாலையும் பார்த்தார்கள். 
( நூல் : முஸ்லிம் : 267 )

இவர்களுக்கு அளிக்கப்படும் வேதனைகளைப் பார்த்தார்கள்

சுவர்க்கத்தின் வானவர் தலைவர் ரிழ்வான் அவர்களை சந்தித்தார்கள்

சுவனத்தை எட்டிப் பார்த்தார்கள். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே பார்த்தார்கள். 

முத்துக்களால் உள்ள கயிறுகளையும் பார்த்தார்கள். சுவனத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது.

சுவ‌ர்க்கச் சோலைகள், ஹூருல் ஈன்கள் (சொர்க்க கன்னிகள்), ஹவ்லுல் கவ்தர் (நீர்த் தடாகம்) காட்டப்பட்டன.
( நூல் : புகாரி : 6581 )

ஜிப்ரயீல் அவர்களின் எல்லை முடிவுற்றது. இனி தன்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. மீறினால் எரிந்து சாம்பலாகி விடுவேன். என்றார்கள்

மேலும், நாம் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்.
(அல்குர்ஆன் : 19:57) 

சித்ரத்துல் முந்தஹா (இலந்தை மரம்) வை அடைந்தார்கள்.

சித்ரத் என்றால் இலந்தை மரம். முன்தஹா என்றால் முடிவு, எல்லை என்பதாகும்.

சித்ரதுல் முன்தஹா என்பது ஆறாம் வானத்தில் தொடங்கி ஏழாம் வானம் வரை நீண்டிருக்கும் பிரமாண்ட மரமாகும்.
( புகாரி-349: )

அங்கிருந்த இலந்தை மரத்தின் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றிருந்தது 
அதன் பழங்களை கூஜாக்களை போன்று (பெரிதாக) இருந்தது. பிறகு
( அல் குர்ஆன் 53:14 ) ( நூல்:முஸ்லிம்:259 )

(அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. 
இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. ‘ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?’ என்று கேட்டேன். 
அவர், ‘உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும். 
வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.
( ஸஹீஹ் புகாரி 3887 )

காபகவுஸைனி அவ் அத்னா(சமீப சமூக ஸ்தானம்)தலம் அடைந்தார்கள்
( அல் குர்ஆன் 53:9 )

சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான 
(இறை)வன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான். 
( ஸஹீஹ் புகாரி 7517 )

முஹம்மதே உம்மை விட்டும் உமது திரையை நீக்கினோம். இன்று உமது பார்வையானது கூர்மையுடையதாகும்.
( அல் குர்ஆன் 50:22 )

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.
( அல் குர்ஆன் 6:103 )

“அல்லாஹ் (நேருக்கு நேர்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒருவருக்குமில்லை எனினும் வஹீயின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது வானவர்களை அனுப்பி வைத்து வஹீயின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை(மனிதனுக்கு) அறிவிக்கிறான். நிச்சயமாக அவன் மிக மேலானவன், மிக ஞானமுடையவன். 
( அல் குர்ஆன் 42:51 )

அல்லாஹ்வின் நூரை-ஒளியை புறக் கண்களால் தரிசித்தார்கள்.

அல்லாஹ் வானங்கள் பூமியின் ஒளியாய் இருக்கிறான்.
அது ஒளிக்கு மேல் ஒளியாகும்
( அல் குர்ஆன் 24:35 )

ஸுஜூது செய்தார்கள்

நபிகள்(ஸல்) அவர்கள்:கூறினார்கள்
வண‌க்கங்களும், வாழ்த்துகளும் அல்லாஹ்வுக்கே உரியன.
அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யி பாத்து

அல்லாஹ்:கூறினான்
நபியே உங்கள் மீது அல்லாஹ்வின் ஸலாமும், அருளும், பரக்கத்தும் உண்டாவதாக.
அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்து லில்லாஹி வபரகாத்துஹு

நபிகள்(ஸல்)  அவர்கள்:கூறினார்கள்
உனது ஸலாம் என் மீதும், வணங்கும் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக.
அஸ்ஸலாமு அலைய்னா வ அலா இபாதிலாஹிஸ் ஸாலிஹிய்ன்.

ஜிப்ரயீல்(அலை)  அவர்கள்:கூறினார்கள்
வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
நாயகம்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன்.
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரசூலுஹு

அல்லாஹ் மூன்று அன்பளிப்புகளைக் கொடுத்தான்.

1. (50 நேரத் தொழுகைகள் பிறகு) ஐந்து நேரத் தொழுகைகள்,
2. அல்பகரா அத்தியாயத்தின் கடைசி 2 வசனங்கள்.  ( அல் குர்ஆன் 2:285, 286 )
3. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் இறந்தவருக்கு பெரும் பாவங்கள் மன்னிக்கப்படும்.
( நூல்:நஸாயீ:447 )

வழங்கப்பட்ட 50 நேரத் தொழுகைளை 5 ஆக குறைத்த விதம்.

1 ஆம் முறை 50 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

2 ஆம் முறை 40 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

3 ஆம் முறை 35 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

4 ஆம் முறை 30 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

5 ஆம் முறை 25 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

6 ஆம் முறை 20 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

7 ஆம் முறை 15 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

8 ஆம் முறை 10 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.
மூஸா(அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடி குறைக்குமாறு வேண்டினார்கள்.

9 ஆம் முறை 5 நேரத் தொழுகையை அன்பளிப்பாக கொடுத்தான்.

தன் நேசரை பிரிய மனமில்லாமல் அல்லாஹ் திரும்ப திரும்ப அழைத்து பேசி மகிழ்ந்தான்.

திரும்ப‌வும் குறைப்பதற்கு வெட்கப்பட்டு பெற்ற‌ அன்பளிப்போடு பைத்துல் முஅஹத்தஸ் திரும்பினார்கள்.
(ஸஹீஹ் புகாரி 3887)

மீண்டும் புராக்கில் பைத்துல் ஹரம் திரும்பினார்கள்.

நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். 
அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். 
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீரை அருந்திவிட்டு 
மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), 
காலையில் மக்களுக்கு இப்பிரயாணக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை 
என்பதற்குரிய மிகப்பெரியஆதாரமாக அமைந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

முதலில் சிறிய தகப்பனார் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள்.

சிறிய தந்தையார் ( அபூ தாலிப் ) மகள் உம்முஹானி(ர‌லி) அவர்களின் வீட்டில் பிரவேசித்து அவர்களிடமும் சொன்னார்கள்.

காஃபாவில் அபூஜஹ்லிடம் நடந்ததைச் சொன்னார்கள்.

அபூஜஹ்ல் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் சொன்னான். எந்த மறுப்புமின்றி உடனே ஏற்றதால் சித்தீக்(உண்மையாளர்) ஆனார்கள்.

 


Thanks to: 

jumuaamedai.wordpress.com, sufimanzil.org

17-07-1442 AH  ரஜப்                       abdulmalick2(at)gmail.com                     01-03-2021  CE

 

Sunday, February 21, 2021

துவா செய்ய பழகிக் கொள்வோம்.

 துவா செய்ய பழகிக் கொள்வோம்.

துவா என்றால் பிரார்தனை, வேண்டுதல், தேவைகளை கேட்டுப் பெருதல் என்று பொருள்படும்.
இறைவனுக்கு உரிய கடமைகளைச் செய்தபின் செய்ய வேண்டிய ஒரு அமல்.

துவா ஒரு வணக்கமாகும்.

செருப்பின் வார் அறுந்து விட்டால் கூட அல்லாஹ்விடம் துவா செய்ய வேண்டும்.

துவாவை அதற்குறிய முறையில் செய்ய வேண்டும்.

துவா எப்படி செய்வது?
அதையும் இறைவனே நமக்கு கற்றுத் தருகிறான்.

நம் குழந்தைகளுக்கு துவா செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் பெற்றோர்களுக்காக செய்யும் துவாவை இறைவன் உடனே ஏற்றுக் கொள்கிறான்.

அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும்.
கிப்லாவை முன்னோக்க வேண்டும்.
கைகளை உயர்த்திக் கேட்க வேண்டும்.


எளிமையான முறை
1. அல்லாஹ்வைப் புகழ்வது.
2. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
3. இம்மைக்கும் மறுமைக்கும் சேர்த்து ஒரே துவா செய்வது.
4. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
5. அல்லாஹ்வைப் புகழ்வது.

உதாரணமாக‌

லகல் ஹம்து லக சுக்ரு யா அல்லாஹ்.

அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதா பன்னார்.

வ ஸல்லல்லாஹு தஆலா வ ஸல்லமலா கைய்ரி கல்கிகி சைய்யதினா முஹம்மதின் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயின்.

சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மா யஸிஃபூன் வ ஸலாமுன் அலல் முர்ஸலிய்ன்
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்.



விரிவான முறை
1. அல்லாஹ்வைப் புகழ்வது.
2. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
3. ஈமானை பலப்படுத்துதல்.
4. தனக்காகவும், மற்ற அனைவர்களுக்காவும் பாவ மன்னிப்பு தேடுதல்.
5. சக்கராத்து மற்றும் கப்று அதாபுகளை விட்டு பாதுகாப்பு தேடுதல்.
6. கேள்விக்கணக்கு  நாளை எண்ணி பாதுகாப்பு தேடுதல்.
7. உலகத்தின் செயல்களுக்கு பாதுகாப்பு தேடுதல்.
8. உறவினற்களுக்காக துவா செய்தல்.
9. நம‌க்கு உதவியவர்களுக்காக துவா செய்தல்.
10. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
11. அல்லாஹ்வைப் புகழ்வது.

உதாரண‌மாக‌

லகல் ஹம்து லக சுக்ரு யா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்.

அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

ரப்பனா லா துஆஹித்னா இன்னஸிய்னா அவ் அஹ்தஹ்னா
ரப்பனா வலா தஹ்மில் அலைய்னா இஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லதிய்ன மி கப்லினா
ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாகதலனா பிஹி 
வ அஃபு அன்னா
வக் பிர்லனா
வர் ஹம்னா
அன்த மவ்லானா
ஃபன்சுர்னா
அலல் கவ்மில் காஃபிரிய்ன் (அல்குர்ஆன் 2: 286)

ரப்பனா லா துஜிய் குலுவ்பனா பஅத இத் ஹதய்தனா வ ஹப்லனா மில்லதுன்க ரஹ்மத்தன் இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்  (அல்குர்ஆன் 3: 8)

ரப்பனா ளலம்னா அன்ஃபுஸனா வ இன் லம் தக்ஃபிர்லனா வ தரஹம்னா லனக்கூனன்ன மினல் ஹாஸிரிய்ன் (அல்குர்ஆன் 7: 23)

இன்னிய் வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லஜிய் ஃபதரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனிய்ஃபன் வமா அனா மினல் முஷ்ரிகிய்ன் (அல்குர்ஆன் 6: 79)

ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ அலைய்ஹி தவக்கல்த்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளிய்ம் (அல்குர்ஆன் 9: 129)

லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னிய் குன்து மினள் ளாலிமிய்ன். (அல்குர்ஆன் 14: 38)

ரப்பி ஜஅல்னிய் முகிய்மஸ் ஸலாத்தி வ மின் துர்ரிய்யத்திய் ரப்பனா வ தக்கபல் துஆ
ரப்ப‌னக் ஃபிர்லிய் வலி வலி வாலிதய்ய வலில் முக்மினிய்ன யவ்ம யகூமுல் ஹிஸாப் (அல்குர்ஆன் 14: 40, 41)

ரப்பிர் ஹம்ஹுமா கமா ரப்ப யானிய் ஸகிய்ரா (அல்குர்ஆன் 17: 24)

ரப்பிஷ் ரஹ்லிய் ஸத்ரிய் வ யஸ்ஸிர்லிய் அம்ரிய் (அல்குர்ஆன் 20: 25, 26)

ரப்பி ஜித்னிய் இல்மா (அல்குர்ஆன் 20: 114)

ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜிய்னா வ துர்ரிய் யாத்திய்னா குர்ரத்த அயுனின் வஜ்அல்னா லில் முத்தகிய்ன இமாம‌ (அல்குர்ஆன் 25: 74)

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகிய்னா அதாபன்னார் (அல்குர்ஆன் 2: 201)

ரப்பனா தகப்பல் மின்னா இன்னக்க அந்த ஸமிய்உல் அளிய்ம்.
வ துப் அலைனா இன்னக்க அந்தத் தவ்வாபுர் ரஹிய்ம். (அல்குர்ஆன் 2: 127-128)

வ ஸல்லல்லாஹு தஆலா வ ஸல்லமலா கைய்ரி கல்கிகி சைய்யதினா முஹம்மதின் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயின்.

சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மாயஸிஃபூன்.
வ ஸலாமுன் அலல் முர்ஸலிய்ன்.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமிய்ன். (அல்குர்ஆன் 37: 180, 181, 182)



இன்னும் ச‌ற்று விரிவான முறையில் தமிழில் துவா

லகல் ஹம்து லக சுக்ரு யா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்.

அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

யா அல்லாஹ் 

உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.
உன்னை அதிகம் அதிகமாக புகழக்கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகமாக ஸலவாத்து சொல்லக்கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்ககூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
தொழுகையை உள்ளச்சத்தோடு உன்னில் லயித்து தன்னை மறந்து அந்த உயிருள்ள தொழுகையைத் தொழுகக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
நோன்புகளை பரிபூரணமாக நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
ஜக்காத்தை முழுமையாக  நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
ஹஜ்ஜை நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
உம்ராவை  நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

நாயகம் (ஸல்) அவர்களை கனவிலும் நனவிலும் தரிசனம் செய்யக்  கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

என்னுடயை பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் தாய் தந்தையர் உடைய‌ பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் மனைவி, மக்கள் உடைய‌ பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் உற்றார் உறவினர் உடைய‌ பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் ஆசிரியர்கள் உடைய‌ பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.

உலகில் உள்ள உண்மையான முஸ்லிம்கள், முஃமின்கள் உடைய‌ பாவங்கள் ..அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.

இறந்த என் முன்னோர்கள் உடைய‌ பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
அவர்களுடைய கப்ரை விரிவாக்குவாயாக.
அவர்களுடைய வேதனையை நீக்கி அருள்வாயாக.
அவர்களுடைய கப்ரின் பக்கம் சொர்க்கத்தின் காற்றை திறந்து விடுவாயாக.
அவர்களுக்கு சொர்க்கத்தின் ஆடையை அணிவிப்பாயாக.

வயது முதிர்ந்த முதுமைப் பருவத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

சக்கராத்துடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
கப்றுடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
கேள்விக் கணக்கை இலேசாக்குவாய் ரஹ்மானே.
மறுமை நாளில் உன்னுடைய அர்ஷ் உடைய நிழலில் எங்களுக்கு இடம் கொடு ரஹ்மானே.
நாயகம் (ஸல்) அவர்கள் கரங்களால் கவ்லுல் கவ்தர் நீரைப் பருகக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

யா அல்லாஹ்
நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தெடுகிறேன்.
சொர்க்கத்தை உன்னிடம் ஆதரவு வைக்கிறேன்.
ஸிராத்துல் முஸ்தகிய்ம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பதற்கு அருள் செய்வாய் ரஹ்மானே.
சொர்க்கத்தில் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நானும், என் குடும்பத்தினர் அனைவரும் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து இருக்க கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

கடனில்லாத வாழ்க்கையை கொடு ரஹ்மானே
வட்டியில்லாத‌ வாழ்க்கையை கொடு ரஹ்மானே
நோயில்லாத‌ வாழ்க்கையை கொடு ரஹ்மானே
ஹலால் ஹராமை பேணி நடக்க‌ கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

பொய் சொல்வதை விட்டும், கோள் சொல்வதை விட்டும், பொறாமை கொள்வதை விட்டும், தற்பெருமையை விட்டும், ஆணவத்தை விட்டும், திமிரை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன்.

ஷைத்தான், நஃப்ஸு, மனிதர்கள், ஜின்கள், பூச்சிகள், விலங்குகள் மற்றும் அனைத்து விதமான தீங்குகளை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன்.

குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
குர்ஆனை மனனம் செய்யக் கூடிய‌ பாக்கியத்தைத் தருவாயாக
குர்ஆனை எங்களுக்கு கப்ரில் ஒளியாகவும், மறுமையில் எங்களுக்காக ஷஃபாத்து செய்யக் கூடியதாகவும் ஆக்குவாயாக.
குர்ஆனை கொண்டு எங்கள் நோய்களுக்கு ஷிஃபா தருவாயாக.

என் சகோதர சகோதரிகளுக்கு உடல் நலத்தைக் கொடு ரஹ்மானே.
அவர்களுடைய ஹலாலான தேவைகளை நிறைவேற்றிக் கொடு ரஹ்மானே.

உன்னை வணங்குவதற்கு எனக்கு யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்களுடைய பாங்களை எல்லாம் மன்னித் தருள்வாயாக.
அவர்களுடைய வணக்கங்களின் குறைபாடுகளை நீக்கி பரிபூரண வணக்கங்களாக ஏற்றுக் கொள்வாயாக.

இந்த துவாக்கள் அனைத்தையும் நாயகம் (ஸல்) அவர்களின் துவா பரக்கத்தினால் ஏற்று நிறைவேற்றிக் கொடுப்பாயாக.

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகிய்னா அதாபன்னார் (அல்குர்ஆன் 2: 201)

ரப்பனா தகப்பல் மின்னா இன்னக்க அந்த ஸமிய்உல் அளிய்ம்.
வ துப் அலைனா இன்னக்க அந்தத் தவ்வாபுர் ரஹிய்ம். (அல்குர்ஆன் 2: 127-128)

வ ஸல்லல்லாஹு தஆலா வ ஸல்லமலா கைய்ரி கல்கிகி சைய்யதினா முஹம்மதின் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயின்.

சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மாயஸிஃபூன்.
வ ஸலாமுன் அலல் முர்ஸலிய்ன்.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமிய்ன். (அல்குர்ஆன் 37: 180, 181, 182)



Thanks to: 

09-07-1442 AH, Rajab                               abdulmalick2(at)gmail.com                                   21-02-2020 CE

Monday, February 8, 2021

அறிவோம் இஸ்லாமிய மாதங்களை

அறிவோம் இஸ்லாமிய மாதங்களை

 

நாம் ஆங்கில மாதங்களை மனனம் செய்து வைத்துள்ளோம்.
இஸ்லாமிய மாதங்களை மனனம் செய்ய தவறிவிட்டோம்.
 
இதை மனனம் செய்வது மிகவும் எளிது.
 
முதலில் 
 
இரண்டு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். பிறகு
நான்கு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். பிறகு
நான்கு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். பிறகு
இரண்டு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். அவ்வளவுதான்.
 
இன்ஷா அல்லாஹ் மனனம் ஆகிவிடும்.
 
1. முஹர்ரம்3. ரபியுல் அவ்வல்7. ரஜப்11. துல்கஅதா
2. ஸஃபர்4. ரபியுல் ஆகிர் (ரபியுஸ் ஸானீ)8. ஷாபான்12. துல்ஹஜ்
 5. ஜுமாதுல் அவ்வல்9. ரமலான் 
 6. ஜுமாதுல் ஆகிர்(ஜமாதிஸ்ஸானீ )10. ஷவ்வால் 
 
இது வெயில் காலம்
இது மழை காலம்
இது குளிர் காலம்
என்னால் நோன்பு வைக்க முடியாது என்று பழிபோட்டு தப்பிப்பவர்கள் அடுத்த வருடமாவது நோன்பை விடாமல் வைக்க இறைவன் கொடுத்த வாய்ப்பு இந்த பிறை மாதக் கணக்கு.
 

 

 

நாம் நம்முடைய பிறந்த நாளை ஆங்கில கணக்குப்படிதான் நினைவு கொள்கிறோம்.

இனி முதல் இஸ்லாமிய முறைப்படி பழகிக்கொள்வோம்.

முதலில் நம்முடைய பிறந்த நாளுக்கு இணையான ஹிஜ்ரி தேதி, மாதம், வருடத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்கு இங்கே செல்லவும். அல்லது என்னைத் தொடர்பு கொள்ள‌வும்.
https://islam-tamilil.blogspot.com/2021/01/best-converter-from-gregorian-to-hijri.html

அதன் பிறகு வரும் ஹிஜ்ரி ஆண்டு முதல் அதே மாதம், தேதியில் நாம் நம் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்.

ஏனென்றால்  ரம்ஜான், பக்ரீத், மிலாடிநபி, ஷஃபே பராத், ஷஃபே மெஹ்ராஜ் மற்றும் அனைத்து  முக்கிய நாட்களுக்கும் ஹிஜ்ரி மாதம், தேதி தேவைப்படுகிறது. அதைப் போன்று நம்முடைய பிறந்த, திருமண நாட்களையும் மற்ற முக்கிய நாட்களையும் ஹிஜ்ரியில் கொண்டுவந்து விட வேண்டும்.

மேலும் தினசரி ஆங்கில தேதியை நாம் பார்த்து பழகுவது போல் இன்று என்ன ஹிஜ்ரி மாதம், எத்தனையாவது பிறை என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஹிஜ்ரி காலண்டரை தினமும் உபயோகிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

இன்றைய ஹிஜ்ரி நாள் எத்தனையாவது பிறை?

இது என்ன மாதம், வருடம் என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.
https://islam-tamilil.blogspot.com/2021/01/hijri-date-today-in-tamil.html

 
 
 
 
ஒவ்வொரு மாதத்தின் சிறப்புகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
 
புனித மாதங்கள் ( Sacred Months )
முஹர்ரம்
ரஜப்
துல்ஹதா
துல்ஹஜ்

நோன்பு அய்யாமுல் பிட்த் ( Ayyamul Bidh )

மாதத்தின் மூன்று நோன்புகள் வைக்க சிறந்த நாட்கள்.

ஒவ்வொரு மாதத்தின் வளர்பிறை 13, 14, 15
 
முதல் மாதம் முஹர்ரம்
1.முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு.
ஹிஜ்ரத், புலம் பெயர்தல், மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த மாதம்.
10 மூஸா (அலை) அவர்களுக்கு  அல்லாஹ் ஃபிர்அவுனிடம் இருந்து வற்றியை கொடுத்த நாள்.
10 கர்பலா யுத்தத்தில் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீதான நாள்.
9, 10, 11 முஹர்ரம் ஆஷுரா 2 நாள் நோன்பு
 
இரண்டாம் மாதம் ஸஃபர்
பொறுமையின் மாதம். வெற்றியின் மாதம்.
ஸ‌ஃபர் மாதத்தின் கடைசி புதன் ஒடுக்கத்து புதன்
 
மூன்றாம் மாதம் ரபியுல் அவ்வல்
12 ரபி உல் அவ்வல் மவ்லித் ( பிறப்பு ) மீலாடி நபி, நபி (ஸல்) அவர்கள் பிறந்த, நினைவு தினம்
 
நான்காம் மாதம் ரபியுல் ஆகிர் (ரபியுஸ் ஸானீ)
11 ரபி உல் ஆகிர் இறைநேசர் மஹ்பூபே சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் நினைவு தினம்.
 
 
ஐந்தாம் மாதம் ஜுமாதுல் அவ்வல்
 
 
ஆறாம் மாதம் ஜுமாதுல் ஆகிர்(ஜமாதிஸ்ஸானீ ) 
 
 
ஏழாம் மாதம் ரஜப்
27 ரஜப் - புனித மெஹ்ராஜ், மிஃராஜ், விண்ணேற்றத்தின் மாதம்.
 
எட்டாம் மாதம் ஷாபான்
15 ஷாபான் ஷபே பராத் இரவு
23 ஷாபான் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் பிறந்த நாள்
 
ஒன்பதாம் மாதம் ரமலான்
1 ரமலான் - முதல் நோன்பு,
17 ரமலான் - நூஸுல் குர்ஆன், பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம் 
21, 23, 25, 27, 29 ரமலான் கடைசி 10 ரமலானில் ஐந்து ஒற்றைப்படை இரவில் ஒரு நாள் - லைலத்துல் கத்ர்,
 
பத்தாம் மாதம் ஷவ்வால்
1 ஷவ்வால் - நோன்பு பெருநாள், ரமலான் பண்டிகை, ஈதுல் ஃபித்ர்
 
பதினொன்றாம் மாதம் துல்கஅதா
 
 
பன்னிரெண்டாம் மாதம் துல்ஹஜ்
8-10 துல்ஹஜ் - ஹஜ் செய்யும் நாட்கள்,
9 துல்ஹஜ் அரஃபா நாள்
10 துல்ஹஜ் - ஹஜ் பெருநாள், பக்ரீத் பண்டிகை, ஈதுல் அல்ஹா
 
 
மற்ற சில முக்கிய நாட்கள்
17 ரபிய்யுல் ஆகிர் டெல்லி ஹஜ்ரத் நிஜாமுத்தீன் வலியுல்லாஹ் கந்தூரி
15 ஜமாதுல் அவ்வல் குணங்குடி மஸ்தான் வலியுல்லாஹ் கந்தூரி
10 ஜமாதுல் ஆகிர் நாகூர் கந்தூரி
6 ரஜப் அஜ்மீர் காஜா முயினுத்தீன் சிஷ்தி கந்தூரி
14 ரஜப் தக்கலை பீர் முஹம்மது வலியுல்லாஹ் கந்தூரி
23 துல்ஹதா ஏர்வாடி இப்ராஹிம் வலியுல்லாஹ் கந்தூரி
3 துல்ஹஜ் அடையார் குராசானி பீர் கந்தூரி
15 துல்ஹஜ் தமீமுல் அன்சாரி (ரலி) கந்தூரி
25 துல்ஹஜ் எழும்பூர் மோத்தி பாபா கந்தூரி
 
 
 
 
 
விரிவான குறிப்புகள்
சூரிய மறைவிற்கு பிறகு ஹிஜ்ரி நாள் ஆரம்பமாகிறது.
அதனால்தான் ரமலான் பிறை பார்த்த அன்றே முதல் தராவிஹ் தொழுகையைத் தொழுகிறோம்.
இஸ்லாத்தில் இரவுதான் ஒரு நாளின் ஆரம்பம். இன்றைய மஃரிப்லிருந்து நாளைய அஸர் வரை ஒரு முழு நாள் கணக்கிடப்படுகிறது.
உதாரணத்துக்கு ஷஃபே பராத் இரவு, மெஹ்ராஜ் இரவு, லைலத்துல் கத்ர் இரவு போன்றவை.
 
 
குரானில் இதைப்பற்றி அல்லாஹ் பின்வரும் ஆயத்துகளில் கூறுவதைப் பாருங்கள்.
 
 (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. அல்குர்ஆன் 2:189
 
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். அல்குர்ஆன் 9:36.
 
அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன் அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 9:37
 
'அவன்தான் சூரியனை சுடரொளி மிக்கதாகவும், சந்திரனை தன்னொளியாகவும் ஆக்கினான். இன்னும் நீங்கள் ஆண்டுகளின் (மாதங்கள், நாட்களின்) எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக அதற்கு பல மன்ஜில்களையும் (தங்குமிடங்களையும்) அவன் ஏற்படுத்தினான். அல்லாஹ் உண்மை(யாகத் தக்க காரணம்) கொண்டே தவிர இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் மக்களுக்கு (த் தன்னுடைய) அத்தாட்சிகளை இவ்வாறே விவரிக்கிறான்'. –(யூனுஸ்: 5) 
 
நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது 9:108
 
 
முற்றிலும் சந்திரனின் சுழற்ச்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி 638 CE  அன்று நபி முஹம்மது(ஸல்) அவர்களின் நெருங்கிய சகாபா மற்றும் இரண்டாவது கலிபாவான உமர் பின் கத்தாப் அவர்களால், அவர் காலத்தில் இருந்த பல்வேறு நாட்காட்டி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர அறிமுகப்படுத்தபட்டது.

அல்குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப்பட்டது… அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்! (அல்குர்ஆன் 2 : 185)

ஹஜ்(ஜுக்குரிய காலம்) அறியப்பட்ட மாதங்களாகும். அதில் ஹஜ்ஜை தம் மீது விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது வீடு கூடுவதோ கொள்வதோ, பாவம் செய்வதோ, வீண் தர்கம் புரிவதோ கூடாது. (அல்குர்ஆன் 2 : 197)

 

ஹதீஸில் இதைப்பற்றி கூறுவதைப் பாருங்கள்.

ரமளான் நோன்பிற்கு அடுத்த சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரம் மாத (ஆஷுரா) நோன்பாகும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 1982)

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மட்டும்தான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்பது போன்று வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்க நான் கண்டதில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம் 1956)

ரமளானில் நோன்பு நோற்று பிறகு அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார். (அறிவிப்பவர் : அபூ அய்யூப் -ரலி, நூல் : முஸ்லிம் 1984)

 

சில தகவல்கள்
 
உமர்(ரழி), அறிஞர்களுடன் கலந்தாலோசித்து இஸ்லாமிய காலம் கணக்கிடும் முறையை ஹிஜ்ராவிலிருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டது.
 
ஹிஜ்ராவின் முதல் மாதமாகிய முஹர்ரமின் முதல் நாளிலிருந்து இஸ்லாமிய நாளேட்டை துவக்குவதாகவும் முடிவு செய்யபட்டது.
 
முஹர்ரம் 1, 1 ஹிஜ்ரி என்பது ஆங்கில நாளேட்டில் ஜுலை16, 622 C.E. குறிக்கிறது.
 
01-01-0001AH = 16-7-0622CE,AD
 
AH = After Hijri
AD = After Death of Jesus Christ as per christian.
CE = Christian Era
BC = Before Christ.
 
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹிஜ்ரா என்பது, நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சியாகும்.
 
ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களை கொண்டது.
 
இஸ்லாமிய நாளேடு சந்திரனை அடிப்படையாக கொண்டதினால், ஆங்கில நாட்காட்டியைவிட 11 நாட்கள் குறைவானது.
 
ஒரு வருடம் 354 அல்லது 355 நாட்களை கொண்டது.
 
மாதங்கள் காலங்களை அடிப்படையாக கொண்டு இல்லை.
 
ஆகையால், முஸ்லிம் பண்டிகைகள் வெவ்வேறு காலங்களில் வரும்.
 
எடுத்துக்காட்டாக நோன்பு பெருநாள் வெயில் காலத்திலும் மழைக்காலத்திலும் வரும்.
 
ஹிஜ்ரி மாதம் ஆரம்பம், முதல் பிறை மட்டும் அடிப்படையாக அல்லாமல், அந்தந்த இடங்களில் கண்ணால் பிறை பார்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளது.
 
ஆகையால் உலகம் முழுவதும் அச்சிடப்பட்ட ஹிஜ்ரி நாளேடுகளில் ஒரு சில நாட்கள் வித்தியாசம் இருக்கலாம்.
 
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு மாதம் அதிகரிக்கிறது.
 
36 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு வருடம் அதிகரித்து விடுகிறது.
 

Thanks to: http://www.tamililquran.com/hijri.asp

abdulmalick2(at)gmail.com 

29-06-1442 AH  ஜமாத்துல் ஆகிர்                                                                                                                                                         12-02-2021  CE

...

 


Print Friendly, PDF & Email

 

"அறிவோம் இஸ்லாமிய மாதங்களை" 

Sunday, February 7, 2021

நாம் யார்? எதற்காக இறைவன் நம்மை படைத்தான்?

 நாம் யார்? எதற்காக இறைவன் நம்மை படைத்தான்?


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

40:62

ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَِ

​தாலிகு முல்லாஹு ரப்புகும் க்ஹாலிகு குல்ல ஷய்யின் லா இலாஹ இல்லாஹு
ஃப அன்ன யா துவ்ஃபகூன்

அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?


நாம் இறைவனின் உயர்ந்த படைப்பு.

இறைவனை வணங்குவதற்காக படைத்தான்.


மற்ற அனைத்து படைப்புகளும் பகுத்தறிவு இல்லாதது.

மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் உண்டு.


உதாரணமாக ஒருவன் மாடு வளர்க்கிறான். தினமும் அதை அடித்து வேலை வாங்குகிறான். 

ஒரு நாளாவது அந்த மாடு யோசித்தது உண்டா? இல்லையே.


இந்த பகுத்து அறியும் சிந்தனை அறிவை இறைவன் மனிதனுக்கு கொடுத்ததாலேயே மனிதன் படைப்புகளில் உயர்தவனாகிறான்.


நாம் சுயமாக உருவாகவில்லை.

நம்மை ஒருவன் உருவாக்கி இருக்கிறான்.


ஒரு கார் தொழிற்சாலையில் தானாக உருவாவதில்லை.

மனிதனின் கட்டளைப்படிதான் உருவாகிறது.


நம்மை உருவாக்கியவனே இறைவன். 

அவன் தான் அல்லாஹ்.


சுயமாக எதையும் நாம் விளங்கி கொள்ள முடியாது.

ஆசிரியரின் உதவி இருந்தால்தான் விளங்கி கொள்ள முடியும்.


மருத்துவ புத்தகத்தை மட்டும் வைத்துக் கொண்டு அறுவை சிகிச்சை செய்யமுடியாது.

அது விபரீதமாகிவிடும்.


பிறந்த குழந்தை உணவுக்காக தன் தாயிடம் செல்ல முடிவதில்லை.

அவனுக்கு உதவி தேவைப்படுகிறது.


மற்ற ஜீவராசிகள் அப்படியில்லை.

ஒரு சிறு உதவி செய்த மனிதனே நன்றியை எதிர்பார்க்கிறான்.

ஒருவன் தன் நண்ப‌னுக்கு மணமுடிக்க பெண் பார்க்க உதவி செய்தான். 

இங்கே ஒரு பெண் இருக்கிறாள் என்று கைகாட்டினான். 

அவ்வளவுதான் அதற்கு காலம் முழுவதும் சொல்லிக் காட்டி அதன் நன்றியை எதிர்பார்க்கிறான். 

மேட்ரிமோனியலில் எத்தனையோ வரன்கள் கிடைக்கின்றன. அதற்கு சிறு தொகைதான். 

அத்தோடு அது முடிந்து விடுகிறது.

அவர்கள் நன்றியை எதிர்பார்ப்பதில்லை.


தனி ஒரு மனிதன் உதவிக்கான நன்றியை காலம் முழுவதும் எதிபார்க்கிறான்.


ஒரு சிறு உதவிக்கே இவ்வளவு நன்றி தேவைப்படும் போது நமக்கு எவ்வளவோ அருள் செய்த ரஹ்மானுக்கு  நாம் எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும்.


தம் வாழ்வின் ஒவ்வொரு நேரமும் நமக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நாயகம்(ஸல்) அவர்களுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும். 


இறைவன் மனிதனைப் படைத்ததான்.

இந்த உலகத்தையே மனிதனுக்காக படைத்தான்.

நாம் அவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?


Wednesday, February 3, 2021

21.11.11

அல்-குர்ஆனை அறிவோம் "மேலும், 'அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் 'அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்' என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால், ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்" (அல்-குர்ஆன் 2:170-171) நபிமொழி அறிவோம் "அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி. http://suvanathendral.com/portal/?cat=316 -- A.M.Abdul Malick

Monday, February 1, 2021

Tamil Quran words easy search

Arabic Quran with English / Tamil Translation

எளிமையான முறையில் குரானில் வார்த்தைகளை தேட‌.......!

உதாரணம் :  அல்லாஹ், இறைவன், இப்ராஹீம், மழை, முகம், வானம், நரகம், 

Tanglish Typing: allah, IRaivan, ibraahiim, mazhai, mugam, vaanam, naragam,

Browse / Search Quran or Translation (English / Tamil) - Chittarkottai.com

குர்ஆன் தமிழாக்கம் அரபி மூலத்துடன் தேட
(Browse Quran in Arabic with Tamil Translation)

அத்தியாயம்

வசன எண்

OR

வசன எண் (உம் 2:124)

 

குர்ஆன் தமிழாக்கத்தில் சொல் தேடல்

Select the Sura Tanglish Typing OR Unicode typing

 

...

தமிழ் குர்ஆன் தமிழாக்கம் அரபி மூலத்துடன் தேட
(Browse Quran in Arabic with Tamil Translation)

 சூரா (அத்தியாயம்)எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்

சூரா Chapter

...

abdulmalick2atgmail.com

Thanks to Chittarkottai.com

Sunday, January 31, 2021

Best Converter from Gregorian to hijri


Best Islamic Hijri Converter To find your birth date from Gregorian to Hijri

abdulmalick.a.m.

Hijri date today in tamil



இன்றைய இஸ்லாமிய நாள்
இன்றைய ஹிஜிரி நாள்
Convert to Hijri day -abdul malick.a.m.

Thursday, November 5, 2020

QURAN SURA MP3 CRISTAL CLEAR VOICE

mp3 Quran Listen & Download
Abdulbasit Abdulsamad - Rewayat Hafs A'n Assem - Rewayat Hafs A'n Assem

Monday, November 2, 2020

Tamil Quran Cha 13

 ...





13. ஸூரத்துர் ரஃது (இடி)
மதனீ, வசனங்கள்: 43

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
13:1
13:1 الٓـمّٓرٰ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ‌ؕ وَالَّذِىْۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَـقُّ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ‏
13:1. அலிஃப், லாம், மீம், றா. இவை வேதத்தின் வசனங்களாகும். மேலும் (நபியே!) உம் மீது, உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டுள்ள இது உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்புவதில்லை.
13:2
13:2 اَللّٰهُ الَّذِىْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا‌ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ‌ؕ كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى‌ؕ يُدَبِّرُ الْاَمْرَ يُفَصِّلُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ‏
13:2. (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
13:3
13:3 وَهُوَ الَّذِىْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ وَاَنْهٰرًا‌ ؕ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِيْهَا زَوْجَيْنِ اثْنَيْنِ‌ يُغْشِى الَّيْلَ النَّهَارَ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
13:3. மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
13:4
13:4 وَ فِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَآءٍ وَّاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
13:4. இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
13:5
13:5 وَ اِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِىْ خَلْقٍ جَدِيْدٍ  ؕ اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ‌ۚ وَاُولٰۤٮِٕكَ الْاَغْلٰلُ فِىْۤ اَعْنَاقِهِمْ‌ۚ وَاُولٰۤٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
13:5. (அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?” என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
13:6
13:6 وَيَسْتَعْجِلُوْنَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُ‌ؕ وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّـلنَّاسِ عَلٰى ظُلْمِهِمْ‌ۚ وَاِنَّ رَبَّكَ لَشَدِيْدُ الْعِقَابِ‏
13:6. (நபியே!) நன்மை (வருவதற்கு) முன்னர், தீமையைக் கொண்டு (வருமாறு) உம்மை இவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் (வேதனை மிக்க தண்டனைகள் வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கின்றன; நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான்.
13:7
13:7 وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖؕ اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرٌ‌ وَّ لِكُلِّ قَوْمٍ هَادٍ
13:7. இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் “அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.  
13:8
13:8 اَللّٰهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُنْثٰى وَمَا تَغِيْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ‌ؕ وَكُلُّ شَىْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ‏
13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.
13:9
13:9 عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ‏
13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.
13:10
13:10 سَوَآءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَ مَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۢ بِالَّيْلِ وَسَارِبٌۢ بِالنَّهَارِ‏
13:10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே).
13:11
13:11 لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ يَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ‌ۚ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ‏
13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
13:12
13:12 هُوَ الَّذِىْ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ‌ۚ‏
13:12. அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.
13:13
13:13 ‌وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰۤـٮِٕكَةُ مِنْ خِيْفَتِهٖ ‌ۚ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيْبُ بِهَا مَنْ يَّشَآءُ وَهُمْ يُجَادِلُوْنَ فِى اللّٰه‌ۚ ِ وَهُوَ شَدِيْدُ الْمِحَالِؕ‏
13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
13:14
13:14 لَهٗ دَعْوَةُ الْحَـقِّ‌ؕ وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَجِيْبُوْنَ لَهُمْ بِشَىْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ اِلَى الْمَآءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِـغِهٖ‌ؕ وَمَا دُعَآءُ الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ‏
13:14. உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.
13:15
13:15 وَلِلّٰهِ يَسْجُدُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۩
13:15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).
13:16
13:16 قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ قُلِ اللّٰهُ‌ؕ قُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ لَا يَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّا‌ؕ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ اَمْ هَلْ تَسْتَوِى الظُّلُمٰتُ وَالنُّوْرُ ۚ اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَـلْقُ عَلَيْهِمْ‌ؕ قُلِ اللّٰهُ خَالِـقُ كُلِّ شَىْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ‏
13:16. (நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.
13:17
13:17 اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّيْلُ زَبَدًا رَّابِيًا‌ ؕ وَمِمَّا يُوْقِدُوْنَ عَلَيْهِ فِى النَّارِ ابْتِغَآءَ حِلْيَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ‌ ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْحَـقَّ وَالْبَاطِلَ ؕ  فَاَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءً‌‌ ۚ وَاَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِى الْاَرْضِ‌ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَؕ‏
13:17. அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
13:18
13:18 لِلَّذِيْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰىؔ‌ؕ وَالَّذِيْنَ لَمْ يَسْتَجِيْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖؕ اُولٰۤٮِٕكَ لَهُمْ سُوْۤءُ الْحِسَابِ ۙ وَمَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ؕ وَبِئْسَ الْمِهَادُ
13:18. எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.  
13:19
13:19 اَفَمَنْ يَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَـقُّ كَمَنْ هُوَ اَعْمٰىؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِۙ‏
13:19. உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.
13:20
13:20 الَّذِيْنَ يُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا يَنْقُضُوْنَ الْمِيْثَاقَۙ‏
13:20. அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.
13:21
13:21 وَالَّذِيْنَ يَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَ يَخَافُوْنَ سُوْۤءَ الْحِسَابِؕ‏
13:21. மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.
13:22
13:22 وَالَّذِيْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً وَّيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ اُولٰۤٮِٕكَ لَهُمْ عُقْبَى الدَّارِۙ‏
13:22. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.
13:23
13:23 جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ‌ وَالْمَلٰٓٮِٕكَةُ يَدْخُلُوْنَ عَلَيْهِمْ مِّنْ كُلِّ بَابٍ‌ۚ‏
13:23. நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
13:24
13:24 سَلٰمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ‌ فَنِعْمَ عُقْبَى الدَّارِؕ‏
13:24. “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)
13:25
13:25 وَالَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِ‌ۙ اُولٰۤٮِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْۤءُ الدَّارِ‏
13:25. எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபந்தான்; அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.
13:26
13:26 اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ وَفَرِحُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ
13:26. அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.  
13:27
13:27 وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖؕ قُلْ اِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ اَنَابَ ‌ۖ ‌ۚ‏
13:27. “இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று
13:28
13:28 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ؕ‏
13:28. (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
13:29
13:29 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰى لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ‏
13:29. எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.
13:30
13:30 كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِىْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّـتَتْلُوَا۟ عَلَيْهِمُ الَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ وَ هُمْ يَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِ‌ؕ قُلْ هُوَ رَبِّىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ مَتَابِ‏
13:30. (நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்: “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது” என்று நீர் கூறுவீராக!
13:31
13:31 وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰى‌ ؕ بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِيْعًا ‌ؕ اَفَلَمْ يَايْــٴَــسِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ يَشَآءُ اللّٰهُ لَهَدَى النَّاسَ جَمِيْعًا ؕ وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا تُصِيْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِيْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰى يَاْتِىَ وَعْدُ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ
13:31. நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசும்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன; ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள் வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.
13:32
13:32 وَلَـقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَيْتُ لِلَّذِيْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ‌ فَكَيْفَ كَانَ عِقَابِ‏
13:32. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)
13:33
13:33 اَفَمَنْ هُوَ قَآٮِٕمٌ عَلٰى كُلِّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ‌ۚ وَجَعَلُوْالِلّٰهِ شُرَكَآءَ ؕ قُلْ سَمُّوْهُمْ‌ؕ اَمْ تُنَـبِّـئُــوْنَهٗ بِمَا لَا يَعْلَمُ فِى الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِؕ بَلْ زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِيْلِ‌ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ‏
13:33. ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்: “அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?” என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன; நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுக்கிறானோ அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை.
13:34
13:34 لَهُمْ عَذَابٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ‌ ۚ وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ‏
13:34. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு, மறுமையின் வேதனை மிகக் கடுமையானது - அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை.
13:35
13:35 مَثَلُ الْجَـنَّةِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ‌ ؕ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ ؕ اُكُلُهَا دَآٮِٕمٌ وَّظِلُّهَا‌ ؕ تِلْكَ عُقْبَى الَّذِيْنَ اتَّقَوْا‌ ‌ۖ  وَّعُقْبَى الْكٰفِرِيْنَ النَّارُ‏
13:35. பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை; இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.
13:36
13:36 وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَفْرَحُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ‌ وَمِنَ الْاَحْزَابِ مَنْ يُّـنْكِرُ بَعْضَهٗ‌ؕ قُلْ اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَاۤ اُشْرِكَ بِهٖؕ اِلَيْهِ اَدْعُوْا وَاِلَيْهِ مَاٰبِ‏
13:36. எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் இருக்கிறார்கள். (அவர்களை நோக்கி:)நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
13:37
13:37 وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِيًّا‌ ؕ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَمَا جَآءَكَ مِنَ الْعِلْمِۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا وَاقٍ
13:37. (நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார்.  
13:38
13:38 وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَ جَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّيَّةً ‌ ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ ؕ لِكُلِّ اَجَلٍ كِتَابٌ‏
13:38. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை; ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.
13:39
13:39 يَمْحُوْا اللّٰهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ‌ۖ ‌ۚ وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ‏
13:39. (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.
13:40
13:40 وَاِنْ مَّا نُرِيَـنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَـتَوَفَّيَنَّكَ فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ وَعَلَيْنَا الْحِسَابُ‏
13:40. (நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ் நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்); உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.
13:41
13:41 اَوَلَمْ يَرَوْا اَنَّا نَاْتِى الْاَرْضَ نَـنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ‌ وَاللّٰهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖ‌ؕ وَهُوَ سَرِيْعُ الْحِسَابِ‏
13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
13:42
13:42 وَقَدْ مَكَرَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِيْعًا‌ؕ يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍؕ وَسَيَـعْلَمُ الْـكُفّٰرُ لِمَنْ عُقْبَى الدَّارِ‏
13:42. (நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன; ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
13:43
13:43 وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا‌ ؕ قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنِىْ وَبَيْنَكُمْۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ
13:43. (நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்” என்று நீர் கூறிவிடுவீராக!

Thanks to: http://www.tamililquran.com/qurandisp.php?start=1#1:7


abdulmalick2


உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

... உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam Your browser should support iFrame to view this PDF document abdulm...