.

...

 


Print Friendly, PDF & Email

 

Sunday, February 7, 2021

நாம் யார்? எதற்காக இறைவன் நம்மை படைத்தான்?

 நாம் யார்? எதற்காக இறைவன் நம்மை படைத்தான்?


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

40:62

ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَِ

​தாலிகு முல்லாஹு ரப்புகும் க்ஹாலிகு குல்ல ஷய்யின் லா இலாஹ இல்லாஹு
ஃப அன்ன யா துவ்ஃபகூன்

அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?


நாம் இறைவனின் உயர்ந்த படைப்பு.

இறைவனை வணங்குவதற்காக படைத்தான்.


மற்ற அனைத்து படைப்புகளும் பகுத்தறிவு இல்லாதது.

மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் உண்டு.


உதாரணமாக ஒருவன் மாடு வளர்க்கிறான். தினமும் அதை அடித்து வேலை வாங்குகிறான். 

ஒரு நாளாவது அந்த மாடு யோசித்தது உண்டா? இல்லையே.


இந்த பகுத்து அறியும் சிந்தனை அறிவை இறைவன் மனிதனுக்கு கொடுத்ததாலேயே மனிதன் படைப்புகளில் உயர்தவனாகிறான்.


நாம் சுயமாக உருவாகவில்லை.

நம்மை ஒருவன் உருவாக்கி இருக்கிறான்.


ஒரு கார் தொழிற்சாலையில் தானாக உருவாவதில்லை.

மனிதனின் கட்டளைப்படிதான் உருவாகிறது.


நம்மை உருவாக்கியவனே இறைவன். 

அவன் தான் அல்லாஹ்.


சுயமாக எதையும் நாம் விளங்கி கொள்ள முடியாது.

ஆசிரியரின் உதவி இருந்தால்தான் விளங்கி கொள்ள முடியும்.


மருத்துவ புத்தகத்தை மட்டும் வைத்துக் கொண்டு அறுவை சிகிச்சை செய்யமுடியாது.

அது விபரீதமாகிவிடும்.


பிறந்த குழந்தை உணவுக்காக தன் தாயிடம் செல்ல முடிவதில்லை.

அவனுக்கு உதவி தேவைப்படுகிறது.


மற்ற ஜீவராசிகள் அப்படியில்லை.

ஒரு சிறு உதவி செய்த மனிதனே நன்றியை எதிர்பார்க்கிறான்.

ஒருவன் தன் நண்ப‌னுக்கு மணமுடிக்க பெண் பார்க்க உதவி செய்தான். 

இங்கே ஒரு பெண் இருக்கிறாள் என்று கைகாட்டினான். 

அவ்வளவுதான் அதற்கு காலம் முழுவதும் சொல்லிக் காட்டி அதன் நன்றியை எதிர்பார்க்கிறான். 

மேட்ரிமோனியலில் எத்தனையோ வரன்கள் கிடைக்கின்றன. அதற்கு சிறு தொகைதான். 

அத்தோடு அது முடிந்து விடுகிறது.

அவர்கள் நன்றியை எதிர்பார்ப்பதில்லை.


தனி ஒரு மனிதன் உதவிக்கான நன்றியை காலம் முழுவதும் எதிபார்க்கிறான்.


ஒரு சிறு உதவிக்கே இவ்வளவு நன்றி தேவைப்படும் போது நமக்கு எவ்வளவோ அருள் செய்த ரஹ்மானுக்கு  நாம் எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும்.


தம் வாழ்வின் ஒவ்வொரு நேரமும் நமக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நாயகம்(ஸல்) அவர்களுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும். 


இறைவன் மனிதனைப் படைத்ததான்.

இந்த உலகத்தையே மனிதனுக்காக படைத்தான்.

நாம் அவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?


No comments:

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

... உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam Your browser should support iFrame to view this PDF document abdulm...