.

...

 


Print Friendly, PDF & Email

 

Monday, February 8, 2021

அறிவோம் இஸ்லாமிய மாதங்களை

அறிவோம் இஸ்லாமிய மாதங்களை

 

நாம் ஆங்கில மாதங்களை மனனம் செய்து வைத்துள்ளோம்.
இஸ்லாமிய மாதங்களை மனனம் செய்ய தவறிவிட்டோம்.
 
இதை மனனம் செய்வது மிகவும் எளிது.
 
முதலில் 
 
இரண்டு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். பிறகு
நான்கு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். பிறகு
நான்கு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். பிறகு
இரண்டு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். அவ்வளவுதான்.
 
இன்ஷா அல்லாஹ் மனனம் ஆகிவிடும்.
 
1. முஹர்ரம்3. ரபியுல் அவ்வல்7. ரஜப்11. துல்கஅதா
2. ஸஃபர்4. ரபியுல் ஆகிர் (ரபியுஸ் ஸானீ)8. ஷாபான்12. துல்ஹஜ்
 5. ஜுமாதுல் அவ்வல்9. ரமலான் 
 6. ஜுமாதுல் ஆகிர்(ஜமாதிஸ்ஸானீ )10. ஷவ்வால் 
 
இது வெயில் காலம்
இது மழை காலம்
இது குளிர் காலம்
என்னால் நோன்பு வைக்க முடியாது என்று பழிபோட்டு தப்பிப்பவர்கள் அடுத்த வருடமாவது நோன்பை விடாமல் வைக்க இறைவன் கொடுத்த வாய்ப்பு இந்த பிறை மாதக் கணக்கு.
 

 

 

நாம் நம்முடைய பிறந்த நாளை ஆங்கில கணக்குப்படிதான் நினைவு கொள்கிறோம்.

இனி முதல் இஸ்லாமிய முறைப்படி பழகிக்கொள்வோம்.

முதலில் நம்முடைய பிறந்த நாளுக்கு இணையான ஹிஜ்ரி தேதி, மாதம், வருடத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்கு இங்கே செல்லவும். அல்லது என்னைத் தொடர்பு கொள்ள‌வும்.
https://islam-tamilil.blogspot.com/2021/01/best-converter-from-gregorian-to-hijri.html

அதன் பிறகு வரும் ஹிஜ்ரி ஆண்டு முதல் அதே மாதம், தேதியில் நாம் நம் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்.

ஏனென்றால்  ரம்ஜான், பக்ரீத், மிலாடிநபி, ஷஃபே பராத், ஷஃபே மெஹ்ராஜ் மற்றும் அனைத்து  முக்கிய நாட்களுக்கும் ஹிஜ்ரி மாதம், தேதி தேவைப்படுகிறது. அதைப் போன்று நம்முடைய பிறந்த, திருமண நாட்களையும் மற்ற முக்கிய நாட்களையும் ஹிஜ்ரியில் கொண்டுவந்து விட வேண்டும்.

மேலும் தினசரி ஆங்கில தேதியை நாம் பார்த்து பழகுவது போல் இன்று என்ன ஹிஜ்ரி மாதம், எத்தனையாவது பிறை என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஹிஜ்ரி காலண்டரை தினமும் உபயோகிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

இன்றைய ஹிஜ்ரி நாள் எத்தனையாவது பிறை?

இது என்ன மாதம், வருடம் என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.
https://islam-tamilil.blogspot.com/2021/01/hijri-date-today-in-tamil.html

 
 
 
 
ஒவ்வொரு மாதத்தின் சிறப்புகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
 
புனித மாதங்கள் ( Sacred Months )
முஹர்ரம்
ரஜப்
துல்ஹதா
துல்ஹஜ்

நோன்பு அய்யாமுல் பிட்த் ( Ayyamul Bidh )

மாதத்தின் மூன்று நோன்புகள் வைக்க சிறந்த நாட்கள்.

ஒவ்வொரு மாதத்தின் வளர்பிறை 13, 14, 15
 
முதல் மாதம் முஹர்ரம்
1.முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு.
ஹிஜ்ரத், புலம் பெயர்தல், மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த மாதம்.
10 மூஸா (அலை) அவர்களுக்கு  அல்லாஹ் ஃபிர்அவுனிடம் இருந்து வற்றியை கொடுத்த நாள்.
10 கர்பலா யுத்தத்தில் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீதான நாள்.
9, 10, 11 முஹர்ரம் ஆஷுரா 2 நாள் நோன்பு
 
இரண்டாம் மாதம் ஸஃபர்
பொறுமையின் மாதம். வெற்றியின் மாதம்.
ஸ‌ஃபர் மாதத்தின் கடைசி புதன் ஒடுக்கத்து புதன்
 
மூன்றாம் மாதம் ரபியுல் அவ்வல்
12 ரபி உல் அவ்வல் மவ்லித் ( பிறப்பு ) மீலாடி நபி, நபி (ஸல்) அவர்கள் பிறந்த, நினைவு தினம்
 
நான்காம் மாதம் ரபியுல் ஆகிர் (ரபியுஸ் ஸானீ)
11 ரபி உல் ஆகிர் இறைநேசர் மஹ்பூபே சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் நினைவு தினம்.
 
 
ஐந்தாம் மாதம் ஜுமாதுல் அவ்வல்
 
 
ஆறாம் மாதம் ஜுமாதுல் ஆகிர்(ஜமாதிஸ்ஸானீ ) 
 
 
ஏழாம் மாதம் ரஜப்
27 ரஜப் - புனித மெஹ்ராஜ், மிஃராஜ், விண்ணேற்றத்தின் மாதம்.
 
எட்டாம் மாதம் ஷாபான்
15 ஷாபான் ஷபே பராத் இரவு
23 ஷாபான் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் பிறந்த நாள்
 
ஒன்பதாம் மாதம் ரமலான்
1 ரமலான் - முதல் நோன்பு,
17 ரமலான் - நூஸுல் குர்ஆன், பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம் 
21, 23, 25, 27, 29 ரமலான் கடைசி 10 ரமலானில் ஐந்து ஒற்றைப்படை இரவில் ஒரு நாள் - லைலத்துல் கத்ர்,
 
பத்தாம் மாதம் ஷவ்வால்
1 ஷவ்வால் - நோன்பு பெருநாள், ரமலான் பண்டிகை, ஈதுல் ஃபித்ர்
 
பதினொன்றாம் மாதம் துல்கஅதா
 
 
பன்னிரெண்டாம் மாதம் துல்ஹஜ்
8-10 துல்ஹஜ் - ஹஜ் செய்யும் நாட்கள்,
9 துல்ஹஜ் அரஃபா நாள்
10 துல்ஹஜ் - ஹஜ் பெருநாள், பக்ரீத் பண்டிகை, ஈதுல் அல்ஹா
 
 
மற்ற சில முக்கிய நாட்கள்
17 ரபிய்யுல் ஆகிர் டெல்லி ஹஜ்ரத் நிஜாமுத்தீன் வலியுல்லாஹ் கந்தூரி
15 ஜமாதுல் அவ்வல் குணங்குடி மஸ்தான் வலியுல்லாஹ் கந்தூரி
10 ஜமாதுல் ஆகிர் நாகூர் கந்தூரி
6 ரஜப் அஜ்மீர் காஜா முயினுத்தீன் சிஷ்தி கந்தூரி
14 ரஜப் தக்கலை பீர் முஹம்மது வலியுல்லாஹ் கந்தூரி
23 துல்ஹதா ஏர்வாடி இப்ராஹிம் வலியுல்லாஹ் கந்தூரி
3 துல்ஹஜ் அடையார் குராசானி பீர் கந்தூரி
15 துல்ஹஜ் தமீமுல் அன்சாரி (ரலி) கந்தூரி
25 துல்ஹஜ் எழும்பூர் மோத்தி பாபா கந்தூரி
 
 
 
 
 
விரிவான குறிப்புகள்
சூரிய மறைவிற்கு பிறகு ஹிஜ்ரி நாள் ஆரம்பமாகிறது.
அதனால்தான் ரமலான் பிறை பார்த்த அன்றே முதல் தராவிஹ் தொழுகையைத் தொழுகிறோம்.
இஸ்லாத்தில் இரவுதான் ஒரு நாளின் ஆரம்பம். இன்றைய மஃரிப்லிருந்து நாளைய அஸர் வரை ஒரு முழு நாள் கணக்கிடப்படுகிறது.
உதாரணத்துக்கு ஷஃபே பராத் இரவு, மெஹ்ராஜ் இரவு, லைலத்துல் கத்ர் இரவு போன்றவை.
 
 
குரானில் இதைப்பற்றி அல்லாஹ் பின்வரும் ஆயத்துகளில் கூறுவதைப் பாருங்கள்.
 
 (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. அல்குர்ஆன் 2:189
 
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். அல்குர்ஆன் 9:36.
 
அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன் அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 9:37
 
'அவன்தான் சூரியனை சுடரொளி மிக்கதாகவும், சந்திரனை தன்னொளியாகவும் ஆக்கினான். இன்னும் நீங்கள் ஆண்டுகளின் (மாதங்கள், நாட்களின்) எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக அதற்கு பல மன்ஜில்களையும் (தங்குமிடங்களையும்) அவன் ஏற்படுத்தினான். அல்லாஹ் உண்மை(யாகத் தக்க காரணம்) கொண்டே தவிர இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் மக்களுக்கு (த் தன்னுடைய) அத்தாட்சிகளை இவ்வாறே விவரிக்கிறான்'. –(யூனுஸ்: 5) 
 
நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது 9:108
 
 
முற்றிலும் சந்திரனின் சுழற்ச்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி 638 CE  அன்று நபி முஹம்மது(ஸல்) அவர்களின் நெருங்கிய சகாபா மற்றும் இரண்டாவது கலிபாவான உமர் பின் கத்தாப் அவர்களால், அவர் காலத்தில் இருந்த பல்வேறு நாட்காட்டி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர அறிமுகப்படுத்தபட்டது.

அல்குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப்பட்டது… அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்! (அல்குர்ஆன் 2 : 185)

ஹஜ்(ஜுக்குரிய காலம்) அறியப்பட்ட மாதங்களாகும். அதில் ஹஜ்ஜை தம் மீது விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது வீடு கூடுவதோ கொள்வதோ, பாவம் செய்வதோ, வீண் தர்கம் புரிவதோ கூடாது. (அல்குர்ஆன் 2 : 197)

 

ஹதீஸில் இதைப்பற்றி கூறுவதைப் பாருங்கள்.

ரமளான் நோன்பிற்கு அடுத்த சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரம் மாத (ஆஷுரா) நோன்பாகும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 1982)

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மட்டும்தான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்பது போன்று வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்க நான் கண்டதில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம் 1956)

ரமளானில் நோன்பு நோற்று பிறகு அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார். (அறிவிப்பவர் : அபூ அய்யூப் -ரலி, நூல் : முஸ்லிம் 1984)

 

சில தகவல்கள்
 
உமர்(ரழி), அறிஞர்களுடன் கலந்தாலோசித்து இஸ்லாமிய காலம் கணக்கிடும் முறையை ஹிஜ்ராவிலிருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டது.
 
ஹிஜ்ராவின் முதல் மாதமாகிய முஹர்ரமின் முதல் நாளிலிருந்து இஸ்லாமிய நாளேட்டை துவக்குவதாகவும் முடிவு செய்யபட்டது.
 
முஹர்ரம் 1, 1 ஹிஜ்ரி என்பது ஆங்கில நாளேட்டில் ஜுலை16, 622 C.E. குறிக்கிறது.
 
01-01-0001AH = 16-7-0622CE,AD
 
AH = After Hijri
AD = After Death of Jesus Christ as per christian.
CE = Christian Era
BC = Before Christ.
 
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹிஜ்ரா என்பது, நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சியாகும்.
 
ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களை கொண்டது.
 
இஸ்லாமிய நாளேடு சந்திரனை அடிப்படையாக கொண்டதினால், ஆங்கில நாட்காட்டியைவிட 11 நாட்கள் குறைவானது.
 
ஒரு வருடம் 354 அல்லது 355 நாட்களை கொண்டது.
 
மாதங்கள் காலங்களை அடிப்படையாக கொண்டு இல்லை.
 
ஆகையால், முஸ்லிம் பண்டிகைகள் வெவ்வேறு காலங்களில் வரும்.
 
எடுத்துக்காட்டாக நோன்பு பெருநாள் வெயில் காலத்திலும் மழைக்காலத்திலும் வரும்.
 
ஹிஜ்ரி மாதம் ஆரம்பம், முதல் பிறை மட்டும் அடிப்படையாக அல்லாமல், அந்தந்த இடங்களில் கண்ணால் பிறை பார்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளது.
 
ஆகையால் உலகம் முழுவதும் அச்சிடப்பட்ட ஹிஜ்ரி நாளேடுகளில் ஒரு சில நாட்கள் வித்தியாசம் இருக்கலாம்.
 
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு மாதம் அதிகரிக்கிறது.
 
36 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு வருடம் அதிகரித்து விடுகிறது.
 

Thanks to: http://www.tamililquran.com/hijri.asp

abdulmalick2(at)gmail.com 

29-06-1442 AH  ஜமாத்துல் ஆகிர்                                                                                                                                                         12-02-2021  CE

...

 


Print Friendly, PDF & Email

 

"அறிவோம் இஸ்லாமிய மாதங்களை" 

No comments:

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

... உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam Your browser should support iFrame to view this PDF document abdulm...